Thursday, 24 May 2018


விலக்கிக்கொள்ளப்பட்ட…

வெளிநடப்பு போராட்டம்…


BSNL செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின்  சார்பில்
28/05/2018 அன்று நாடு முழுக்க வெளிநடப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.   

நமது அறிவிப்பினைத் தொடர்ந்து சங்கத்தலைவர்களை சந்தித்த  
BSNL CMD ஹைதராபாத் நகரில்  28/05/2018 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது என்றும் நிகழ்ச்சி நிரலில் 
அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார். 
எனவே 28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

28ந்தேதி போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டாலும்…
செல்கோபுரம் தனி நிறுவன முடிவு கைவிடப்படும் வரை
தொடரட்டும் நமது போராட்டக்கனல்…

Wednesday, 23 May 2018


வெளிநடப்பு போராட்டம்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

BSNL நிறுவனத்தின் 
செல்கோபுரங்களைத் தனியாகப்பிரித்து…

துணை நிறுவனம் ஆரம்பிக்கத்துடிக்கும் 
மத்திய அரசைக் கண்டித்து…
துணை போகும் BSNL வாரியத்தைக் கண்டித்து…

28/05/2018 திங்கள் அன்று…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்த…
நாடு தழுவிய வெளிநடப்பு போராட்டம்…

BSNL நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடக்கும்
 ஹைதராபாத் நகரில்... 28/05/2018 அன்று

அனைத்து தொழிற்சங்கப் 
பொதுச்செயலர்கள் தலைமையில்…
மாபெரும் கண்டனப் பேரணி 
மற்றும் 
ஆர்ப்பாட்டம்…

BSNL நிறுவனம் காத்திட…
செல்கோபுரம் தனி நிறுவனம் தடுத்திட…
தொடரட்டும் போராட்டம்…
தொடங்கட்டும் போர்க்களம்…

Tuesday, 22 May 2018

குருதியில் நீந்தும் காலம்
சுடுடா சுடு

நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு..
குண்டுகள் வீணாக்காமல் சுடு..

பத்துக்குண்டுகளுக்கு
பத்துப்பேர் விழ வேண்டும்..

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுட வேண்டியதில்லை
முதலில் முட்டுக்கு கீழே சுட வேண்டியதில்லை..
கண்ணீர் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை..

வீண் செலவுகளை தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
மக்கள் சாகப்பிறந்தவர்கள்
வாழ்வதற்காக சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளை சுடுவதென்றால் கூட
குறிபார்க்கவேண்டும்..
மிருகங்களை சுடுவதென்றால் கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்..

மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளை செலுத்து
அவர்கள் அதை புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு...

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை...

இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது
ஒரு பதினேழு வயது சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைபோல
ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன..

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போல பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது...

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது..

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாக புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்து சவ ஊர்வலங்கள்
ஒரே நேரத்தில் கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் 
எப்படி அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாக கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரை கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்க கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.
தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.
எதற்கு என்று கேட்காதீர்கள்.
மக்கள் தங்களை வன்மத்துடன்
ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்
 -மனுஷ்ய புத்திரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி...  படுகொலையைக் கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம் 

23/05/2018 - புதன் - மதிய உணவு வேளை... 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.. 

தோழர்களே... வருக...

Friday, 18 May 2018


தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018

புதிய தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018
 வரைவுத்திட்டம்  01/05/2018 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.  25/05/2018க்குள் கருத்துக்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


புதிய தேசிய தொலைத்தொடர்புக்
கொள்கையின் குறிக்கோள்கள்...

2022ம் ஆண்டிற்குள்…

அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை

தொலைத்தொடர்பில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் GDP 6 சதத்திலிருந்து 
8 சதமாக தொலைத்தொடர்பின் பங்கை உயர்த்துதல்.

தொலைத்தொடர்பில் உலகளவில் 
134வது இடத்தில் உள்ள  இந்தியாவை
முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம்பெறச்செய்வது.

தொலைத்தொடர்பில் இந்தியாவின் பங்கை
 உலக அளவில் உயரச்செய்தல்…

தொலைத்தொடர்பில் வல்லமை மிக்க கோலோச்சுதல்.

Thursday, 17 May 2018


எங்கே ஜெகன்?

நேர்மை தொலைந்து விட்டதே…
நியாயம் வளைந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?


ஒற்றுமை ஒழிந்து விட்டதே…
வேற்றுமை பெருகி விட்டதே…
எங்கே ஜெகன் ?

அணைக்கும் கரங்கள் அருகி விட்டதே…
அழிக்கும் கரங்கள் வளர்ந்து விட்டதே….
எங்கே ஜெகன் ?


கோரிக்கை முழக்கம் குறுகி விட்டதே…
கேளிக்கை  வழக்கம் எகிறி விட்டதே…
எங்கே ஜெகன் ?

லஞ்சமும் ஊழலும் நாறி விட்டதே…
வஞ்சமும் துரோகமும் ஊறி விட்டதே…
எங்கே ஜெகன் ?

செங்கொடி செம்மை இழந்து விட்டதே…
செம்மையாய் பறக்க மறந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?எங்கே ஜெகன் ?எங்கே ஜெகன் ?

மே – 17

NFTE இளைஞர் தினம்
தோழர். ஜெகன் பிறந்த நாள்
உலகத்தொலைத்தொடர்பு நாள்

சிறப்புக்கூட்டம்
17/05/2018 – வியாழன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

தோழர்களே… வருக…

Monday, 14 May 2018


ஓய்வூதியப் பட்டறை
 
AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் 
நலச்சங்கத்தின் சார்பாக...

சென்னையில் ஓய்வூதியப்பட்டறை

15/05/2018 – செவ்வாய்க்கிழமை – காலை 10 மணி
பூக்கடை தொலைபேசி நிலையம் – சென்னை.

தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்பு…

Thursday, 10 May 2018


நிறைவு நாள் தெருமுனைப்பிரச்சாரம்.. 

நிறைவு நாள் தெருமுனைப்பிரச்சாரம்

11/05/2018 – வெள்ளிக்கிழமை  
மாலை 04 மணி - இராமேஸ்வரம்.

பங்கேற்பு

தோழர் .முருகானந்தம் – AITUC
தோழர். வெங்கடேசன் - AIBSNLEA
தோழர். இராமமூர்த்தி – AIBSNLEA
தோழர். இராமநாதன் - SNEA
தோழர். முருகன்  - NFTCL 
தோழர். லோகநாதன் – BSNLEU
தோழர். கேசவன் – BSNLEU
தோழர். பிரேம்குமார் - BSNLEU 
தோழர். வெ.மாரி – NFTE
தோழர். இராஜன் – NFTE
தோழர். சேதுராஜன் – NFTE

மற்றும் தோழர்கள்….

தோழர்களே… வருக….

கண்டன ஆர்ப்பாட்டம் 

அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி

செல்கோபுரம் தனி நிறுவனம் எதிர்த்து

தெருமுனைப்பிரச்சாரம் மற்றும்
கண்டன ஆர்ப்பாட்டம்

11/05/2018 – வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
இராஜீவ் காந்தி சிலை அருகில் – காரைக்குடி.

பங்கேற்பு
அனைத்து சங்கத்தலைவர்களும்… தோழர்களும்….

தோழர்களே… வருக….

Wednesday, 9 May 2018


தொடரும் மக்கள் சந்திப்பு இயக்கம் 

BSNL செல்கோபுரங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில்…
தனித்துணை நிறுவனமாகப் பிரிக்க முடிவெடுத்த மத்திய அரசின் தனியார் ஆதரவுப் போக்கினை அம்பலப்படுத்திட...

நாடு தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம்

10/05/2018  -  வியாழன் மாலை 05.00 மணி
அரண்மனை வாசல் – இராமநாதபுரம்

பங்கேற்பு :  
தோழர்.முருகபூபதி
CPI மாவட்டச்செயலர்

தோழர்.வெ.மாரி
NFTE மாவட்டச்செயலர்

மற்றும் தோழர்கள்…
 --------------------------------------------------------------------------------------

10/05/2018  -  வியாழன் மாலை 05.00 மணி
 கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் - காரைக்குடி

பங்கேற்பு :
தோழர். பழ. இராமச்சந்திரன் AITUC
தோழர். அழகர்சாமி – CITU
தோழர்.சாமி திராவிடமணி 
தலைவர் – வர்த்தகர் சங்கம்

மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள்

தோழர்களே… வாரீர்…

Tuesday, 8 May 2018


மக்கள் சந்திப்பு இயக்கம்

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

மக்கள் சந்திப்பு இயக்கம்

09/05/2018 -  புதன்கிழமை – சிவகங்கை
10/05/2018  - வியாழக்கிழமை – காரைக்குடி
11/05/2018  - வெள்ளிக்கிழமை – இராமநாதபுரம்

 தோழர்களே… அணி திரள்வீர்….

Monday, 7 May 2018


தெருமுனைப்பிரச்சாரம்

BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்


BSNL செல்கோபுரங்களைப் பிரித்து
தனித்துணை நிறுவனம் அமைக்கும்...

மத்திய அரசின் BSNL விரோத…
பொதுத்துறை விரோதப் போக்கினைக் கண்டித்தும்…

மத்திய அரசின் தனியார் மய ஆதரவு போக்கினை
மக்களுக்கு அம்பலப்படுத்திடவும்…

 வீதிவழி விழிப்புணர்வு விளக்கவுரை


09/05/2018 – புதன்கிழமை – காலை 10 மணி
பேருந்து நிலையம் – சிவகங்கை 

பங்கேற்பு


தோழர்.C.K.மதிவாணன்
NFTE அகில இந்தியத் துணைத்தலைவர்

தோழியர்.கண்ணகி
CPI சிவகங்கை மாவட்டச்செயலர் 

தோழர்.கந்தசாமி
CPM சிவகங்கை மாவட்டச்செயலர்

மற்றும் அனைத்து 
தொழிற்சங்கத்தலைவர்கள்
 தோழர்களே… வருக….


AIBSNLPWA - NFTE – NFTCL

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம்
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
 சிவகங்கை கிளைகள்

 பணி நிறைவு பாராட்டு விழா 

09/05/2018 – புதன் – காலை 11.00 மணி
செந்திலாண்டவர் திருமண மண்டபம்
காவல் நிலையம் அருகில் சிவகங்கை

பணி நிறைவு பாராட்டு பெறும் தோழர்கள்

S.சேகர்  
TT திருப்புவனம்

N.குப்பமுத்து  
TT சிவகங்கை

S.இராஜாமணி
 OS சிவகங்கை

V.சுப்பிரமணியன் 
 TT சிவகங்கை

M.சர்தார் 
 TT சிவகங்கை

P.ஜெயகரன் 
 TT சிவகங்கை

வாழ்த்துரை : தோழர்கள்

C.K.மதிவாணன்
NFTE அகில இந்தியத் துணைத்தலைவர்

P.முருகன்  
AIBSNLPWA – மாவட்டச்செயலர்

V.மாரி 
 NFTE - மாவட்டச்செயலர்

மற்றும் தலைவர்களும்… தோழர்களும்…

தோழர்களே… வருக…

அன்புடன் அழைக்கும்…

A.சந்திரன்
AIBSNLPWA - கிளைச்செயலர்

B.முருகன்
NFTE கிளைச்செயலர்  
NFTCL மாவட்டச்செயலர் - சிவகங்கை