Thursday 8 February 2018


அஞ்சல் AGPக்கு அஞ்சலி…
AG.பசுபதி 
AGP என்று அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்டு வந்த
அஞ்சல் தலைவர் ...அருமைத்தோழர்.
A.G.பசுபதி அவர்கள்
07/02/2018 அன்று மறைந்தார்.

NFPTE இயக்க வரலாற்றில்
தபால் பிரிவில் நீண்ட நெடுங்காலம்
மாநிலச்செயலராகப் பணியாற்றியவர்.
அவரது மறைவிற்கு நமது
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

நெல்லை அஞ்சல் ஊழியர்களின் அஞ்சலிக்கவிதை

பசுபதி எனும் பாசத்தலைவன் போய்விட்டான் -
திராவிட இயக்கத்தின் அணையா
தீபமும் அணைந்துவிட்டது..

காக்கி சட்டைக்கு -தனி
கவுரவம் பெற்று தந்த
கறுப்புச் சட்டை காரனே !
கொள்கை சிறகல் என மேடைதோறும்
கொட்டி முழங்கியவனே !

தபால் காரனுக்கு
புது முகவரி எழுதியவனே !
தமிழக தொழிற்சங்கத்திற்கு -ஒரு
எழுச்சியை கொடுத்தவனே !

நீ -அறிமுகப்படுத்திய
அரை நிர்வாண போராட்டம் -தமிழக
அஞ்சல் அதிகாரிகளை
வெட்கப்படவைத்தது -
அப்பாவி ஊழியர்களின் நெஞ்சங்களில்
விடுதலை வேட்கையை
வெளிக்கொண்டு வந்தது

கிழட்டு சிங்கமே ! உன்னிடம் தான்
கர்ஜனையை கடைசிவரை
கேட்க முடிந்தது -
உடல் சோர்வினும் -உறுதி குறையா
உள்ளத்தினை பார்க்க முடிந்தது

பெரியாரின் பிடிவாதமும்
உனக்கு உண்டு
பேரறிஞரின் நினைவாற்றலும்
நிரம்ப உண்டு
திராவிடத்தின் மீது
தீரா காதல் உண்டு -இறுதிவரை
தோழர்களின் தோழமையில்
பிடிப்பும் உண்டு

நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்றபின்
நினைவுகளை பகிர்ந்து
நீ எழுதும் கடிதம் -அதுதான்
தொண்டனுக்கு நீ அனுப்பும்
பாராட்டு பத்திரம்

பதில் கடிதம் எழுதாமல்
இருந்ததில்லை -
பார்க்கும் பொழுதெல்லாம் பழைய
நினைவுகளை பரிமாறாமல்
விட்டதில்லை

தமிழக தொழிற்சங்கத்தில் மீண்டும்
ஒரு வெற்றிடம் -நிரந்தமாகிறது
நிரம்ப பேர் இருந்தாலும்
நிரப்பப்போவது யார் ?
உன்னைப்போல் கொள்கை காற்றை
ஊழியர்கள் நெஞ்சங்களில்
பரப்ப போவது யார் ? பாதுகாப்பது யார் ?

1 comment:

  1. AGP was a very respected leader of Postal employees. Despite his age has attended the funeral ceremony of Com D.Gmamaiah at Coimbatore. I pay my deep condolance. Mali

    ReplyDelete