Wednesday, 25 April 2018


ஓய்வு பெற்றோர் மருத்துவப்படி

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவப்படி
01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான
இரண்டு காலாண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.  
மருத்துவப்படி வழங்கியதால் BSNLக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து வழங்கிட நிர்வாகம் தயக்கம் காட்டியது.

ஆனாலும் மூத்த தோழர்களின் கோரிக்கையைக் கணக்கில் கொண்டு 01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான காலத்திற்கு  மருத்துவப்படி வழங்கிட நிர்வாகம் 
இன்று 25/04/2018 உத்திரவிட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 2018-19ல் மருத்துவப்படி தொடருமா?
 என்பது பற்றி நிர்வாகம் விரைவில் தனது முடிவை 
அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிதி நெருக்கடியில்
மருத்துவப்படி மீண்டும் தொடராது என
நிர்வாகம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனாலும்...நமது நிறுவனத்தில் ஊதாரித்தனமாக
பல கோடி ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன.
பல்லாண்டு உழைத்த தோழர்களுக்கு...
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு…
மூத்த குடிமக்களுக்கு தொடர்ந்து
மருத்துவப்படியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Tuesday, 24 April 2018


தெருமுனைப் போராட்டம்

24/04/2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
NFTE பொதுச்செயலர் தோழர். C.சிங் அவர்கள்
தலைமையில் டெல்லியில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்தும்…
மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கை எதிர்த்தும்…
07/05/2018 முதல் 11/05/2018 வரை ஐந்து நாட்கள்
நாடு தழுவிய தெருமுனைப் பரப்புரைகள்…

11/05/2018 அன்று
நாடு தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டங்கள்…
துணை நிறுவனம் நிறுத்தக்கோரி…
பிரதம மந்திரிக்கு தொலைஅச்சு கோரிக்கை மனு….

தோழர்களே…
நம் கண்ணின் மணியாம்
BSNL நிறுவனம் காத்திட…
ஒலிக்கட்டும் வீதியிலே குரல்..
ஒழியட்டும் விரோதச்செயல்…
களமிறங்குவோம்… காரியமாற்றுவோம்…

Monday, 23 April 2018


குறுஞ்செய்திகள்

01/04/2018 IDA உயர்விற்கான BSNL உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

JE இலாக்காத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

BSNL ஊதாரிச்செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம் 09/05/2018 அன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தற்காலிக ஓய்வூதியம் PROVISIONAL PENSION பெறுவோரின் 
ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

NFTE தமிழ்மாநிலச்செயற்குழு 14/05/2018 
அன்று கரூரில் நடைபெறுகிறது.

நட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவேண்டும் என DPE இலாக்கா 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவத்திட்டத்தில் ரூ.3500/=க்கு மேல் அதிகமாக வருமானம் உள்ள குடும்ப உறுப்பினர்களை சேர்க்க இயலாது. இந்த உச்சவரம்பை உயர்த்திட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 7வது ஊதியக்குழுவில் தற்போது குறைந்தபட்ச உச்சவரம்பு ரூ.9000/= 

மத்தியப்பிரதேசத்தில் BSNL நியமன அதிகாரிகளுக்கு 
புதிய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஊழியர்களையும் சேர்க்க வேண்டும் என 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

பன்முகத்திறன் கொண்ட பதவிகளை உருவாக்கிட 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

JE(TTA) இலாக்காத் தேர்வு முடிவுகள்

தேர்ச்சியும்... அதிர்ச்சியும்...

28/01/2018 அன்று நடைபெற்ற JE(TTA) இலாக்காத்தேர்வு முடிவுகள் இன்று 23/04/2018  CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்தியா முழுவதும் 9145 காலியிடங்கள் இருந்தன. 
ஆனால் நாடு முழுக்க 95 தோழர்கள் 
மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

தேர்வில் கண்டறியப்பட்ட பல குளறுபடிகளை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியும் பலன் ஏதுமில்லை. குளறுபடிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு 100 கேள்விகளில் 9 கேள்விகளில் மட்டுமே பிழைகள் இருப்பதாக அறிவித்தது. தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் சுட்டிக்காட்டிய குளறுபடிகளில் 
உண்மையில்லை என்று நிர்வாகம் மறுதலித்துள்ளது.


மேலும்... வெற்றி பெற்ற தோழர்கள் அவர்களது பதவி 
எந்நேரமும் பறிக்கப்படலாம் என்பதை அறிந்திருப்பதாக 
நிர்வாகத்திற்கு UNDERTAKING தரவேண்டும். 

தமிழகத்தில் OC/OBC பிரிவில் 4 தோழர்களும்… 
SC பிரிவில் ஒரு தோழரும், 
ST பிரிவில் ஒரு தோழரும் வெற்றி பெற்றுள்ளனர். 
சென்னைத்தொலைபேசியில் ஒரேயொரு 
தோழர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளார்.

காரைக்குடி மாவட்டத்தில் தோழியர்.ஜூலி TT
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 

வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்
M.செல்வகுமார் - OC
விஜயகுமார் துரைசாமி -OBC
AS.குருபிரசாத் - OBC
S.ஜூலி - SC
D.சுரேஷ்குமார் - SC
P.சந்திரன் - ST

மொத்தக் காலியிடங்களில் சுமார் ஒரு சத ஊழியர்கள் மட்டுமே தங்கள் பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 
இது வருத்தத்தின் உச்சமாகும். அதிர்ச்சியின் அதிகபட்ச அளவாகும். 

அந்தமான், பீகார், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, கொல்கத்தா பகுதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.  JE நேரடி நியமனத்தில் பல்வேறு  மாநிலங்களில் இருந்து தோழர்கள் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணி புரிகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களில் இலாக்காத் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை என்பது சிந்திக்க வைக்கிறது. 

JE பதவிகளில் இலாக்கா ஊழியர்களை ஓரங்கட்டி… 
வெளியாட்களை நியமனம் செய்வதற்கான
 மறைமுக ஏற்பாடாகவே நமது இலாக்காத் தேர்வுகளும்… 
அதன் முடிவுகளும் இருப்பதாக நமக்குப் புலப்படுகின்றது.

Tuesday, 17 April 2018


கிளை மாநாடு

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
இராமநாதபுரம்

 கிளை மாநாடு
பணி நிறைவு பாராட்டு விழா

21/04/2018 – சனிக்கிழமை - மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

-: தலைமை :-
தோழர்.அமலநாதன் – கிளைத்தலைவர்

செயல்பாட்டறிக்கை – நிதியறிக்கை – தீர்மானங்கள் –
அமைப்புநிலை - புதிய நிர்வாகிகள் தேர்வு – இன்ன பிற

பணி நிறைவு பாராட்டு 
தோழர். R. அமலநாதன்
கிளைத்தலைவர்


தோழர். C.கோபிநாதன் 
கிளைப்பொருளர்


சிறப்புரை
வழக்கறிஞர் தோழர். முருகபூபதி - AITUC

 தோழர் G.சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்
   
பங்கேற்பு : தோழர்கள்
 S.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர்

B.லால்பகதூர்
NFTE மாவட்டத்தலைவர்

K.தமிழ்மாறன்
AIBSNLEA மாவட்டத்தலைவர்

B.முருகன்
NFTCL மாவட்டச்செயலர்

V.மாரி
NFTE மாவட்டச்செயலர்

C. இராமமூர்த்தி
AIBSNLPWA கிளைச்செயலர் - இராமநாதபுரம்

K.சேதுராஜா
NFTE கிளைச்செயலர் – இராமேஸ்வரம்

A.தமிழரசன்
NFTE கிளைச்செயலர் – பரமக்குடி

K.நாராயணமூர்த்தி
NFTE கிளைச்செயலர் – மானாமதுரை

T.அல்போன்ஸ்
NFTE கிளைச்செயலர் – திருப்பத்தூர்

I.சேவியர்
NFTE கிளைச்செயலர் பொறுப்பு – தேவகோட்டை

M.ஆரோக்கியதாஸ்
NFTE கிளைச்செயலர் – காரைக்குடி

நன்றியுரை
தோழர்.அரியமுத்து
NFTE மாவட்ட உதவித்தலைவர்

தோழர்களே.. வாரீர்…
அன்புடன் அழைக்கும்…
G.தங்கராஜ் - கிளைச்செயலர்

Friday, 13 April 2018


ஏப்ரல் 14
அண்ணல் அம்பேத்கார்
பிறந்த நாள்
 
பிறப்பு சிறப்பல்ல… 
உழைப்பே சிறப்பு…

அண்ணல் அம்பேத்கார் 
புகழ் பாடுவோம்

ஏப்ரல் 13
ஜாலியன்வாலாபாக் நினைவு தினம் 


1919 ஏப்ரல் 13…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின்
ஜாலியன் வாலாபாக் திடல்…
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்….

விசாரணையின்றி விடுதலைப் போராட்ட வீர்ர்களை
சிறையில் அடைக்கும் கொடுமைக்கு எதிராக...
வாய்ப்பூட்டு சட்டம் ரெளலட் சட்டத்திற்கு எதிராக…

வெறிகொண்ட ஜெனரல் டயர்...
குறிவைத்து அப்பாவி மக்களை...
குண்டுகள் தீருமட்டும் சுட்டான்…

கத்தியின்றி.. இரத்தமின்றி...
வரவில்லை சுதந்திரம்…


பீறிட்ட குருதியில்.. 
வீறிட்டு எழுந்ததுதான்…
இந்திய சுதந்திரம்….


ஜாலியன் வாலாபாக் 
தியாகிகளை நினைவு கூர்வோம்…

Thursday, 12 April 2018


ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை பிறந்த நாள் 
பாட்டாளிகளின் பட்டுக்கோட்டை

காடு விளைஞ்சென்ன
கையும் காலும்தானே மிச்சமென்று
கவிபாடிய பட்டுக்கோட்டையே

இன்று
காடும் விளையவில்லை..
கழனியிலும் ஈரமில்லை
தேகம் குளிரவில்லை
தேசம் வளரவில்லை


சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?..
என்று கேள்வி எழுப்பிய பட்டுக்கோட்டையே

இன்று
படித்தவன் பாவம் செய்கின்றான்
ஆள்பவன் அநீதி செய்கின்றான்
வலுத்தவன் வாழ்கிறான்
இளைத்தவன் வீழ்கிறான்


காலத்தால் அழியாத
கருத்துப் பெட்டகம்
கவிஞர் பட்டுக்கோட்டை புகழ் ஓங்குக


அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

NFTE – BSNLEU
அண்ணல் அம்பேத்கார் 
பிறந்த நாள் விழா

13/04/2018 – வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள்

இமயம் சரவணன்
தேசிய ஒருங்கிணைப்பாளர் 
தமிழர் முன்னணி

A.பொன்னுச்சாமி
மாவட்டச்செயலர் 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி

பழ.இராமச்சந்திரன்
துணைப்பொதுச்செயலர் - AITUC

மணிபாரதி
வழக்கறிஞர்  
கலை இலக்கியப்பெருமன்ற மாநிலக்குழு

தோழர்களே… வாரீர்….

Wednesday, 11 April 2018


EPF ஓய்வூதியப் பங்களிப்பு

EPF எனப்படும் ஊழியர் வைப்புநிதி BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகின்றது.
ஒப்பந்த ஊழியர்களுக்கும் இதுவே பொருந்தும்.
தற்போது ஊழியர்கள் பெறும் மாதச்சம்பளத்தில் 
BASIC + IDA அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படியில்
12 சதம் வைப்புநிதியாக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படுகின்றதுஅதே 12 சதத்தொகையை நிர்வாகம் தனது பங்களிப்பாக ஊழியர் வைப்புநிதிக்கு அளிக்கின்றது.

ஊழியரிடமிருந்து பிடிக்கப்படும் தொகை நேரடியாக அவரது சேமிப்புக்கணக்கில் செல்கின்றதுநிர்வாகம் செலுத்தும் தொகை சேமிப்பு மற்றும் ஓய்வூதியப்பங்களிப்பு என இருவகையாகப் பிரிக்கப்பட்டு செலுத்தப்படுகின்றது.

EPF நிர்வாகம் ஓய்வூதியப்பங்களிப்பிற்கு 
ஊதிய உச்சவரம்பு WAGE CEILING நிர்ணயித்துள்ளது.
ஊழியர்கள் பெறும் சம்பளத்தின் அளவு கூடுதலாக இருந்தாலும்
EPF நிர்வாகம் நிச்சயித்துள்ள உச்சவரம்பின் அடிப்படையில்தான் ஓய்வூதியப்பங்களிப்பு செய்ய இயலும்.

உச்சவரம்புத்தொகையில் 
8.33 சதம் ஓய்வூதியப்பங்களிப்பு  வழங்கப்படுகின்றது.
ஓய்வூதியப்பங்களிப்பு உச்சவரம்பு...
01/06/2001 முதல் 31/08/2014 வரை ரூ.6500/=எனவும்
01/09/2014 முதல் ரூ.15000/= எனவும் உயர்த்தப்பட்டன.
தற்போது ரூ.15000/=ல் 8.33 சதம் அதாவது ரூ.1250/= 
உயர்ந்தபட்ச ஓய்வூதியப்பங்களிப்பாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் 15000க்கும் அதிகமாக கூடுதல் சம்பளம் பெறும் ஊழியர்கள் சிலர் தங்களது தற்போதைய வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு இருக்க வேண்டும் என வழக்குமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமும் அவர்களது கோரிக்கை நியாயமென்றும் அவர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தின் ACTUAL WAGE அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

எனவே 15000க்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஊழியர்கள்
தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தங்களது நிர்வாகத்தின் மூலமாக விருப்பக்கடிதங்களை அளிக்க வேண்டும் என EPF நிர்வாகம் எல்லாத்துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நமது BSNL தமிழ்மாநில நிர்வாகமும் ஊழியர்கள் தங்களது விருப்பங்களை 15/04/2018க்குள் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி மூலமாக தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான இரு படிவங்களில் கையெழுத்திட்டு கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு தோழர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் EPS எனப்படும் ஓய்வூதியம் கூடுதலாக கிடைக்கும்.  
தற்போது 15000/= உச்சவரம்புத்தொகையில் ரூ.1250/= பங்களிப்பு செய்வோருக்கு பணிக்கால ஓய்விற்குப்பின்...
ஓய்வூதியம் மாதம் ரூ.7500/= என்றளவில் கிடைக்கும்.
மாதச்சம்பளம் ரூ.30000/= பெறுபவர்கள் ரூ.2500/= என்ற பங்களிப்பு செய்து மாதம் ரூ.15000/= ஓய்வூதியமாகப் பெறலாம்.

BSNL நேரடி ஊழியர்கள் ஓய்வு பெறும் காலங்களில் இந்த ஓய்வூதியம் பலன் தருவதாக அமையும்.
வைப்புநிதியில் 35 வருடம் உறுப்பினர்களாக நீடித்தவர்களுக்கு மட்டுமே முழு ஓய்வூதியம் கிட்டும்.
குறைந்த சேவைக்காலம் கொண்டவர்களுக்கு
அதற்கேற்ற PROPORTIONATE ஓய்வூதியம் கிட்டும்.  
எனவே மாதம் ரூ.15000/=க்கும் அதிகமாக சம்பளம்  வாங்கும் தோழர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.

CASE STUDY – எடுத்துக்காட்டு உதாரணம் – தற்போதைய நிலை

Name
SHANMUGAVALLI A
Designation
Office Superintendent
UAN No
100348000000
EPF Account No.
TN/50110/904
Gross Monthly Wages
41,124.00
Current Basic
17,130.00
Current DA
21,738.00
Total Current Salary for EPF
38,868.00
Pension Salary
15,000.00
Employee Contribution on Current  Salary
4,664.00
Employer Contribution (Pension) 8.33 on  15000/=
1,250.00
Employer Contribution (EPF)
3,414.00
Total Employer Contribution
(Pension+EPF savings)
4,664.00
EDLI Contribution
75.00
PF Admin Charges
253.00
Total EPF Payable
9,656.00

மேலே கண்ட ஊழியருக்கு தற்போது...
அவர் வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பிடித்தம் செய்தால்…
ஓய்வூதியப்பங்களிப்பு ரூ.38,868/=ல் 8.33 சதம் =       ரூ.3238/=
சேமிப்பு கணக்கில் செலுத்தப்படுவது (ரூ.4664 – 3238)= ரூ.1426/=

நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதனுடைய பங்களிப்பு 
ரூ.4664/- என்பதில் மாற்றம் இல்லை.

தற்போது ரூ.4664/= என்பது 
ரூ.1250 + 3414 என்று பிரித்தளிக்கப்படுகின்றது.
வாங்கும் சம்பளத்தில் விருப்பம் தெரிவித்தால்
ரூ.4664/= என்பது ரூ.3238 + ரூ.1426/= என்று பிரித்தளிக்கப்படும்.

ரூ.15000/= உச்சவரம்பில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்தால் ஓய்வூதியம் மாதம் ரூ.7500/= கிடைக்கும்.
ACTUAL WAGE ரூ.38868/=ல் விருப்பம் தெரிவித்தால்
ஏறத்தாழ ரூ.19400/= மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.

சேமிப்பில் அதிகப்பணம் சேரவேண்டும் என்று எண்ணுவோர் அப்படியே விட்டுவிடலாம். கூடுதலாக ஓய்வூதியம் வேண்டும் என்று எண்ணுவோர் தங்களுடைய வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.
இது முழுக்க முழுக்க ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
தோழர்கள் சிந்தித்து முடிவெடுக்கவும்.