Monday 4 December 2017

எங்கே பணம்?
WHERE IS THE MONEY?

WHERE IS THE MONEY?
இது பெங்களூரில் நமது இலாக்கா அமைச்சர்…
அவரைச் சந்தித்து ஊதிய மாற்றம் சம்பந்தமாக
கோரிக்கை மனுக்கொடுத்த ஊழியர்களிடம் கேட்ட கேள்வி…

இந்தக்கேள்வி…
வழிந்து ஓடும் எங்கள் வியர்வையை…
வரியாக உறிஞ்சும் அரசே?
எங்கே எங்கள் பணம்? என்று
மந்திரியைப் பார்த்து
மக்கள் கேட்க வேண்டிய கேள்வி…
ஆனால் மந்திரி நம்மைப் பார்த்து
எங்கே பணம் என்று கேட்கும் நிலைதான்…
இந்த தேசத்தில் இன்று நிலவுகிறது…

பணம்…. பணம்.. பணம்…
இதைத்தேடுவதுதான்…
இன்றைக்கு அரசியல்வாதிகளின் குணம்…

இதைக் கண்ணுற்றதும்….
1952ல் கலைவாணர்
பணம் என்ற படத்தில்… பாடி நடித்த
பணத்தை எங்கே தேடுவேன் ?    என்ற
பாடல் வரிகளே நம் நினைவுக்கு வருகின்றன…
 ------------------------------------------------------------------------------------
பணத்தை எங்கே தேடுவேன்?

எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும்

பணத்தை எங்கே தேடுவேன்?

அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும்
பணத்தை எங்கே தேடுவேன்

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை எங்கே தேடுவேன் ?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண் புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
பணத்தை எங்கே தேடுவேன்

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத
பணத்தை எங்கே தேடுவேன் ?

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?

சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ
பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணமே
உன்னை எங்கே தேடுவேன்?

No comments:

Post a Comment