Wednesday 27 December 2017

BSNL புத்தாக்கமும்...BJP கடமையும்…
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு
கேள்விகளுக்குப் பதிலளித்த நமது இலாக்கா அமைச்சர் 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின்
கடன் மற்றும் நட்டக்கணக்கைப் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் BSNL சந்தித்துள்ள நட்டம்
2014-15 Rs.8234/- கோடி
2015-16 Rs.4875/- கோடி
2016-17 Rs.4786/- கோடி

கடந்த மூன்று வருடங்களில் BSNL வாங்கியுள்ள கடன்
2014-15 Rs.6385/- கோடி
2015-16 Rs.7883/- கோடி
2016-17 Rs.3813/- கோடி

கடந்த மூன்று வருடங்களில் MTNL சந்தித்துள்ள நட்டம்
2014-15 Rs.2893/- கோடி
2015-16 Rs.2005/- கோடி
2016-17 Rs.2970/- கோடி

கடந்த மூன்று வருடங்களில் MTNL வாங்கியுள்ள கடன்
2014-15 Rs.12070/- கோடி
2015-16 Rs.13398/- கோடி
2016-17 Rs.15160/- கோடி

2016-17ம் நிதியாண்டில் BSNL வாங்கியுள்ள கடன்
ரூ.3813/- கோடியாகும்.
அதே வேளை மிகப்பெரும் சந்தையைக் கைவசம் வைத்துள்ள 
AIRTEL நிறுவனத்தின் கடன் செப்டம்பர் 2017 நிலவரப்படி 
ரூ.91480/= கோடியாகும்.
நமது நிறுவனத்தை விட 24 மடங்கு 
கடன் சுமையில் AIRTEL தத்தளிக்கின்றது.

மேலும் BSNL மற்றும் MTNL நிறுவனங்களின்
புத்தாக்கத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் 
நமது அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

BSNL நிறுவனம் திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது 
BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொதுத்துறையாகும்.
திரு.வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தை
நல்லாட்சி தினமாக BJP கொண்டாடுகிறது.
அவரது நல்லாட்சியில் துவங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை 
நல்லபடியாக காப்பாற்ற வேண்டியது 
தற்போதைய அரசின் கடமையாகும்.

BSNL என்ற பொதுத்துறை 
BJP பெற்ற பிள்ளையாகும்.
இதைக் காக்க வேண்டியது... 
BJP அரசின் கட்டாயக் கடமையாகும்.
காலம் செய்யும் கோலம் என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்….

No comments:

Post a Comment