Thursday 26 October 2017

மணக்கட்டும்… மதுரை... 

மதுரை…
மல்லிகைக்கும்...பெயர் பெற்றது…
மல்லுக்கும்... பெயர் பெற்றது...

பல்வேறு காரணங்களால்…
மதுரை
NFTE மாவட்டச்சங்கம் தொடர்ந்து
மனக்குமுறலுக்கு ஆளானது…
காலவரையற்ற போராட்டத்திற்கு தயாரானது…
மாவட்ட நிர்வாகம் மல்லுக்கு நின்றது…
கூடவே மாற்றுச்சங்கமும் வரிந்து கட்டியது…
மாநிலச்சங்கம் தலையிட்டது…
மாநில நிர்வாகம் வழிகாட்டியது….

இரண்டு சங்கங்களையும் அழைத்துப் பேசியது
மதுரை மாவட்ட நிர்வாகம்…

ஒருதலைப்பட்சம் தனக்கு இல்லை….
நடுநிலையே தனது நிலை என்பதை..
ஆக்கப்பூர்வமான தனது அணுகுமுறையால்
மதுரை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது…

இது.. வடகிழக்குப் பருவமழைக்காலம்….
இதோ… மதுரையிலே வெப்பம் தணிகிறது…
இதமாய்... தோழமை துளிர் விடுகின்றது…

NFTE என்னும் பாரம்பரியச்சங்கமும்…
BSNLEU என்னும் பெரும்பான்மைச்சங்கமும்…
தோழமையோடு நின்று… கரம் கோர்த்து…
தொழிலாளர் துயர் தீர்க்கும் நிலை உருவாகிறது…

நமது நிறுவனமாம் BSNL காத்திட வேண்டும்…
தொழிலாளர் உரிமைகளை வென்றிட வேண்டும்…
மக்கள் விரோத அரசுகளை அகற்றிட வேண்டும்…
இந்த திசைவழியில்… 
NFTE மதுரை மாவட்ட சங்கம்…
தோழமையுடன் அனைவருடன் கரம்கோர்த்து
தொடர்ந்து நடைபோடும்…. என்று நம்புகிறோம்…

NFTEன் மாண்பை… மரபைக் காக்க..
மதுரை மாவட்டச்சங்கம் பாடுபடவேண்டும்….
இதுவே நமது வேண்டுகோள்… விழைவு…
மணக்கட்டும்….. மதுரை… மல்லிகையாய்…

வாழ்த்துக்களுடன்…
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்….

No comments:

Post a Comment