Tuesday 13 June 2017

காத்திருப்பு

வைப்பு நிதி வருமா? வராதா?
கல்விக்கட்டணம் செலுத்திட…
கவலையுடன்..DOT தொழிலாளர் காத்திருப்பு..

சம்பளம் வருமா? வராதா?
சாப்பாட்டுக்கு வழியில்லாமல்…
சாமானிய ஒப்பந்தத் தொழிலாளி காத்திருப்பு…

சம்பளக்குழு வருமா? வராதா?
அதிகாரிகள்... ஊழியர்கள் என
அனைவரும் காத்திருப்பு…

ஓய்வூதியத்திட்டம் வருமா? வராதா?
BSNL நேரடித்தொழிலாளி….
நெடுங்காலம் காத்திருப்பு…

தேக்கநிலை தீருமா… தீராதா?
ஏக்க மனத்துடன்….
எண்ணற்ற தொழிலாளி காத்திருப்பு…

ஊதியக்குழு வருமா? ஓய்வூதியம் தருமா?
ஒவ்வொரு நாளும் ஓய்வு பெறும்…
ஓய்வூதியர்கள் காத்திருப்பு…

இங்கே…
காத்திருப்புக்கள் கணக்கற்றவை…
ஏமாற்றங்களும் எண்ணற்றவை…

ஏமாற்றங்கள் மாற்றங்களாகுமா?
காத்திருப்புக்கள் காரியமாகுமா?
காத்திருக்கிறான் தொழிலாளி…
காலம் காலமாய்….

No comments:

Post a Comment