Wednesday 12 April 2017

அமைதி வழிப்போராட்டம்

காரைக்குடி மாவட்டத்தில்...
தேங்கிக்கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக 
12/04/2017 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் தலைமையில் நடைபெற்றது. 
மூத்த தோழர்.பூபதி அவர்கள் துவக்கி வைத்தார். 
தோழர்.நாகேஸ்வரன், தோழர்.முருகன், தோழர்.பழ.இராமச்சந்திரன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். 

மாநிலச்சங்கத்தின் சார்பாக திருச்சியிலிருந்து...
மாநில உதவிச்செயலர் தோழர்.முருகேசன் கலந்து கொண்டார். 
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் ஆதரவு உரை நல்கினார். 
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கருணை அடிப்படை விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வது...
இறந்து போன, பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பதவி உயர்வு…
ஒழுங்கு நடவடிக்கைகளைத் தீர்த்து வைப்பது…
நாலுகட்டப்பதவி உயர்வு…
பணிநிரந்தர உத்திரவு…
நீண்ட நாள் காத்திருப்போரின் மாற்றல்கள்…
அலுவலகங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லாதது…
என பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன..

மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை
அசட்டுத்தனமாகவும்… 
அசட்டைத்தனமாகவும் இருந்ததை…
உடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட
தோழர்.முருகேசன் நேரடியாகக் கண்ணுற்றார்…

கிடப்பில் கிடக்கும் விதி 8 மாற்றல் மற்றும் தற்காலிக மாற்றல் விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு மாநிலச்சங்கம் நேரடியாகத் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் என மாநிலச்சங்கத்தின் சார்பில் தோழர்.முருகேசன் உறுதி அளித்தார்.

சங்க நிர்வாகிகள்  மற்றும் மூத்த தோழர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு இரவு 8 மணிக்கு
உண்ணாவிரதம் மாநில உதவிச்செயலர் 
தோழர்.முருகேசன் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும்...
மாநிலச்சங்கத்திற்கும் நமது நன்றிகள்...

ஏப்ரல் மாதத்திற்குள் பிரச்சினைகளில்
முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்…
வழக்கமான மந்தம் தொடருமானால்…
போராட்டத் தீப்பந்தம் கொளுத்துவதைத் 
தவிர வேறு வழியில்லை..

காரைக்குடியில்….
மனிதர்கள் உள்ளனர்...
வாடிக்கையாளர்கள் உள்ளனர்
அதிகாரிகள் உள்ளனர்…
தொழிலாளர்கள் உள்ளனர்…
தொழிற்சங்கங்கள் உள்ளன…
நிர்வாகம்… 
அப்படி ஏதாவது ஒன்று உள்ளதா?
என்ற கேள்வியை உண்ணாவிரதத்தில்
கலந்து கொண்ட தோழர்கள்…
நெஞ்சில் சுமந்து சென்றனர்….

No comments:

Post a Comment