Monday 6 March 2017

நேர்மையின் சிகரம்…

சென்ற நூற்றாண்டு… DOT காலம்…

தோழர்.ஜெகன்

AITUC பேரவைக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

இராமேஸ்வரம் வந்தார்…

அவர் எங்கு எந்த வேலையாக வந்தாலும்

அந்தப்பகுதி தோழர்களிடம் 

தவறாமல் தகவல் தருவார்…

எனவே AITUC கூட்டம் முடிந்த பின் 

அன்று மாலை இராமநாதபுரத்தில் 

தோழர்.ஜெகன் கலந்து கொள்ளும்

சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்தோம்…

கூட்டம் முடிந்த பின் வழியனுப்ப

இராமநாதபுரம் இரயில் நிலையம் சென்றோம்...

போக்குவரத்துப்படியாக

ரூ.400/=ஐ அவரிடம் 

கவரில் வைத்து நீட்டினோம்…

அவர் அதை மறுத்தார்…

தனது போக்குவரத்துப்படியை

AITUC சங்கம் தந்து விட்டதாகவும்…

அதனால் கூடுதல் போக்குவரத்துப்படிக்கு

அவசியமில்லை என்று கூறினார்…

இரயில் கிளம்பும்போது தோழர்.சவுக்கத் அலி

கவரை அவரது பையிலே வைத்து விட்டு

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிவிட்டார்..

எங்களது செயல் கண்டு 

தனது வழக்கமான புன்னகையை சிந்தியவர் 

ஓர் விரல் காட்டி எங்களை கண்டித்தார்.

அது தாய் தன் பிள்ளைகளைக்

கண்டிப்பது போல இருந்தது…

அவருடைய பேச்சைக் கேட்காமல்

அவரிடம் பணத்தை அளித்ததில் 

எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி…

நான்கு நாட்கள் கழித்து…

சென்னை சிந்தாதிரிப்பேட்டை 

முகவரியில் இருந்து…

எங்களுக்கு ஒரு கவர் வந்தது…

தோழர்.ஜெகன் அனுப்பியிருந்தார்…

பிரித்துப் பார்த்தோம்…

கவருக்குள் 

மாநில சங்க நன்கொடை ரூ.400/= 

என்று கையெழுத்திட்டு ரசீது இருந்தது…

கூடவே காரைக்குடித் தோழர்களுக்கு நன்றி..

என்று துண்டுச்சீட்டும் இருந்தது…

ஆம்… தனக்குத் தோழர்கள் கொடுத்த

கூடுதல் பணத்தை அவர் 

மாநில சங்க கட்டிடத்திற்கு 

நன்கொடையாக தந்து விட்டார்.

அவரது நேர்மையைக் கண்டு

கண்கள் பனித்தன…

நமது கையிலிருந்த ரசீது ஈரமாக இருந்தது…

தோழர்களே…

இன்றைய தமிழக NFTE சங்கத்தில்

யாரேனும்… எவரேனும் அவர் போல் உண்டா?

இன்றைய தமிழக NFTE 

எங்கே சென்று கொண்டிருக்கிறது?

நேர்மை கொண்ட சிந்தாதிரிப்பேட்டை…

இன்று செம்புதாஸ் தெருவிற்கு அடிமை…

வீறுகொண்ட சங்கம் வீரு கொண்டு..

வெள்ளனூரில் வீழ்ந்து கிடக்கிறது…

இது காலத்தின் கோலம்…


நல்லவர்களுக்கு இனி இங்கு இடமில்லை…

2 comments:

  1. ஒழுங்கீனங்கள் துவங்கியபோதே தோழர். ஜகன் முன் கையெடுத்து சரிசெய்ய விரும்பினார். அதைத்தொடர்ந்தே அடுத்த கட்ட மூத்த தலைவர்கள் வழிகாட்டலில் நாங்கள் சமரைத் தொடங்கினோம். தோழர் ஜகன் மனம் வெதும்பிய காட்சிகள் கண் முன் இன்றும் விரிகின்றன. அன்றே சரி செய்திருந்தால் செம்புதாஸ் தெருக் கொள்ளையர்கள் முன் மண்டியிடும் அவலம் யாருக்கும் நேர்ந்திருக்காது.

    ReplyDelete
  2. பார்த்து தோழர் வலைத்தளத்தையும் முடக்க போகின்றார்கள்.......

    ReplyDelete