Friday 17 March 2017

பெருஞ்சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
BIG SPECIAL ECONOMIC ZONES

இந்தியாவின் வங்கக்கடலோரம் மற்றும்
அரபிக்கடலோரங்களில் விரைவில்
இரண்டு பெருஞ்சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
நிறுவப்படும் என நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி
திரு.அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.
கடலோரங்களில் பொருளாதார மண்டலங்கள் 
அமைப்பதின் மூலம் போக்குவரத்து 
எளிதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்குப்பகுதியில் குஜராத் மாநிலமும்...
கிழக்குப்பகுதியில் ஆந்திரா மாநிலமும்...
இதற்கென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது...

மும்பையில் 17/03/2017 அன்று
தொழில் முதலீட்டாளர்களுடன் நடந்த கூட்டத்தில்
திரு.கந்த் மேற்கண்ட செய்தியை அறிவித்துள்ளார்.
மேற்கண்ட கூட்டத்தில் பங்கேற்ற
மகிந்த்ரா நிறுவங்களின் CMD
திரு.ஆனந்த் மகிந்த்ரா கூறும்போது
இந்தியாவில் அளவுக்கு அதிகமான
தொழிலாளர் சட்டங்கள் உள்ளன.
இவற்றை ஒழித்தால் அன்றி
பொருளாதார மண்டலங்களை
அமைக்க இயலாது எனக்கூறியுள்ளது
நாம் மிகவும் கூர்மையாக
கவனிக்க வேண்டிய பிரச்சினையாகும்.

குஜராத் மாநிலத்தில் தொழிலாளர் சட்டங்கள்
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பொருந்தாது 
என அந்த மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது
வரவேற்கத்தக்கது எனவும் அவர்
மகிழ்வோடு குறிப்பிட்டுள்ளார்...
ஆனால்... நாம் மகிழ்வோடு அதைப்பார்க்க முடியாது....

நிதி ஆயோக் CEO திரு.கந்த் கூறும்போது
இந்தியாவில் முதலாளிகள் மனம் போல்
தொழில் தொடங்குவதற்காக
நடைமுறையில் இருந்த 1200 சட்ட விதிகளை
BJP  அரசு ரத்து செய்து விட்டதாகவும்…
தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருந்தால்
பெரும் முன்னேற்றம் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்...
ஆனால் இதை நாம் கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில்
முதலாளிகள் முதல் போட்டுத்தொழில் தொடங்கலாம்…
அவர்களின் அடிமை அரசும் சிவப்புக்கம்பளம் விரித்து
அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம்.
ஆனால் அங்கேயெல்லாம் வியர்வை சிந்தி வேலை செய்யப்போவது
தொழிலாளர்களே அன்றி முதலாளிகள் அல்ல...

இது போன்ற...
உழைப்பவன் உரிமைகளைப் பறிக்கும்
சிறப்பு  பொருளாதார மண்டலங்களில்…
நாங்கள் பணியாற்ற மாட்டோம்… என்று
இந்தியத் தொழிலாளர் வர்க்கம் திரண்டெழ வேண்டும்…

பெருஞ்சிறப்பு பொருளாதார மண்டல சுரண்டலை
பெருஞ்சிவப்பு தொழிலாளர் படை தகர்த்தெறிய வேண்டும்…. 
அன்றுதான்...தொழிலாளர்களின் பெருஞ்சிறப்பை உலகறியும்…

No comments:

Post a Comment