Thursday 16 March 2017

பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு

7வது ஊதியக்குழு.. 
பணிக்கொடை GRATUITY உச்சவரம்பை...
01/01/2016 முதல்.. ரூ.10லட்சத்திலிருந்து 
ரூ.20 லட்சமாக உயர்த்தியிருந்தது.

ஆனால் உச்சவரம்பு உயர்வு
BSNLலில் அமுல்படுத்தப்படவில்லை.
வழக்கம் போல் சந்தேகங்கள்… விளக்கங்கள்…

பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு
16/03/2017 அன்று பணிக்கொடை உச்சவரம்பை
BSNL/MTNLலில் அமுல்படுத்திட DOT உத்திரவிட்டுள்ளது.

உச்சவரம்பு உயர்வு
01/01/2016 முதல் அமுலுக்கு வருகிறது.
ஜனவரி 2016ல் 33 ஆண்டுகள் சேவை முடித்து
அடிப்படைச்சம்பளம் ரூ.28540/=க்கும் கூடுதலாக பெற்ற
தோழர்களுக்கு பணிக்கொடை 10 லட்சத்தைத் தாண்டும்.

பெரும்பகுதி ஊழியர்களான
போன்மெக்கானிக் தோழர்களுக்கு
இதனால் பலன் இல்லை.
ரூ.28540/-க்கும் குறைவாகவே அவர்களுடைய 
அடிப்படைச்சம்பளம் இருக்கும்.
SR.TOA, SR.ACCT மற்றும் TTA கேடர்களுக்கும்..
பெரும்பகுதி அதிகாரிகளுக்கும்
உச்சவரம்பு உயர்வினால் பலன் கிட்டும்…

மரணமுற்ற ஊழியர்களுக்கு
சேவைக்காலம் 20 ஆண்டுகள் என்றால்…
அடிப்படைச்சம்பளம் ரூ.23550/-க்கும்
அதிகமாக இருக்கவேண்டும்…

சேவைக்காலம்.. 
33 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால்..
அடிப்படைச்சம்பளம் ரூ.14270/-க்கும் 
கூடுதலாக இருக்க வேண்டும்…

முழு ஓய்வூதியம் பெறுவதற்கு 
20 ஆண்டுகள் சேவை போதுமென
2006 முதல் விதிகள் தளர்த்தப்பட்டு விட்டன.

ஆனாலும்…
முழு பணிக்கொடை பெறுவதற்கு
33 ஆண்டுகள் சேவைக்காலம் வேண்டும் 
என்ற மிகப்பழைய விதிமுறை
இன்னும் மாற்றப்படவில்லை…
என்பது வருத்தத்திற்குரியது.
இந்த உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment