Friday 10 March 2017

மகப்பேறு விடுப்பு உயர்வு

தனியார் மற்றும் இதர நிறுவனங்களில்
தற்போது வழங்கப்பட்டு வரும்
12 வார கால மகப்பேறு விடுப்பு
26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதற்காக
Maternity Beneift (Amendment) Act 2016
என்ற சட்டதிருத்தத்தை
09/03/2017 அன்று அமுல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில்
ஏறத்தாழ 20 லட்சம் பெண்கள் பணிபுரிகிறார்கள்.

உலகில் முதன்முதலாக
மகப்பேறு விடுப்பை அமுல்படுத்தியது சுவீடன் நாடாகும்.
தற்போது கனடாவில் 50 வாரங்களும்,
நார்வேயில் 40 வாரங்களும்,
இந்தியாவில் 26 வாரங்களும்
மகப்பேறு விடுப்பாக அளிக்கப்படுகிறது. 

மேற்கண்ட சட்டம்
பத்துக்கும் அதிகமான பெண்கள்
பணிபுரியும் நிறுவனங்களுக்கும்,
அதில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்...

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெறுவோருக்கும்...
3 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளை
தத்து எடுத்து வளர்க்கும் பெண்களுக்கும்…
வாடகைத்தாயாக குழந்தை பெறும் பெண்களுக்கும்...
12 வாரங்கள் விடுப்பு அளிக்கப்படும்.

50க்கும் அதிகமாக பெண்கள் பணிபுரியும் இடங்களில்
குழந்தைகள் பராமரிப்பகம் அமைக்க வேண்டும்…
குழந்தைகளுக்கு பணியின் போது நான்குமுறை
பாலூட்ட அனுமதி அளிக்கப்பட வேண்டும்
வீட்டில் இருந்தே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும்...
என்பது மேற்கண்ட சட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

No comments:

Post a Comment