Sunday 12 February 2017

NFTCL மாநில மாநாட்டுத்தீர்மானங்கள்

 தீர்மானங்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க சட்டப்படியான நடவடிக்கையினை சம்மேளத்தின் மூலம் எடுக்க வேண்டும்.

மத்திய அரசு 19.01.2017 ல் வெளியிட்ட குறைந்தபட்ச ஊதியத்தை
அன்றைய தேதியிலிருந்தே அமல்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

அனைத்து பகுதிநேர ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்
8 மணி நேர வேலையை உத்திரவாதம் செய்திடல் வேண்டும்.

மாதம் 30 நாட்களும் சம்பளம் வழங்கிட வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு EL,
தற்செயல் விடுப்பு CL வழங்கிட வேண்டும்.

சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கிட வேண்டும்.

பண்டிகை காலங்களுக்கு ஊதியத்துடன் கூடிய
சம்பளம் வழங்கிவேண்டும்.

BSNL முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையை அனைவருக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்பே வழங்க உறுதி செய்ய வேண்டும்.

ஒப்பந்ததாரர் மூலம் EPF மற்றும் ESI பிடித்தம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய சம்பளப் பட்டியல் அளிக்க வேண்டும்.

தொழிலாளர்களை UNSKILLED, SEMI SKILLED, SKILLED  எனத்தரம் பிரித்து உரிய ஊதியத்தைப் பெற வகை செய்தல் வேண்டும்.

ESI விதிகளின்படி பகுதிநேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அனைத்து ஊர்களிலும்… மருத்துவ ஈட்டுறுதி திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்.

பகுதிநேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் EPF திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். 

மாதந்தோறும் ஊழியர்களின் பெயர் மற்றும் UAN எண்ணுடன் கூடிய  EPF பிடித்த விவரப்பட்டியலை அலுவலகத் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.

அனைவருக்கும் ஆயுள்  குழுக்காப்பீட்டுத்திட்டத்தை நிர்வாகம்
ஒப்பந்ததாரர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டும். 

No comments:

Post a Comment