Sunday 5 February 2017

சாத்தானின் குழந்தை...


நைஜீரியா… 
வறுமையில் நைந்துபோன ஏரியா…
சாத்தானின் தேசம் என நைஜீரியாவிற்குப் பெயருண்டு…
நைஜீரிய மக்கள்.. 
சாத்தானின் சந்ததி என்று அழைக்கப்படுவர்…

அந்த சாத்தானின் சந்ததியில்..
ஒருவன்தான் இரண்டு வயது ஹோப்…
எலும்பும் தோலுமான ஹோப்பிற்கு 
சதையும் இரத்தமும் பகையானது…
ஆம்.. அவனது பெற்றோர்களே.. 
அவனை சாத்தானின் குழந்தை என்று சொல்லி கைவிட்டனர்..
டென்மார்க் சமூக ஆர்வலர் லோவன் 
ஹோப்பைத் தெருவில் கண்டார்..
மனதிலே HOPE உடன் ஹோப்பை மீட்டார்…

ஆப்பிரிக்க குழந்தைகள் உதவி மன்றத்தில் அவனைச் சேர்த்தார்…
சமூக வலைத்தளத்தில் ஹோப்பை பற்றி பதிவு செய்தார்…
எலும்பையும் அது போர்த்திய தோலையும் கண்ட 
மக்கள் மனம் கசிந்தது…
ஹோப்பிற்கு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி குவிந்தது…
சாத்தானின் குழந்தை சத்தான குழந்தையாக மாறியது…
ஹோப் முழு உடல்தகுதி பெற்றுவிட்டான்…
பள்ளிக்கு உற்சாகமாக படிக்கச் செல்கிறான்…
ஹோப் மறுபிறவி எடுத்து விட்டான்…

மணம் வீசும் மனிதநேயம் கண்டு நமக்கும்…
மனதில் HOPE நம்பிக்கை பிறக்கிறது…

No comments:

Post a Comment