Wednesday 22 February 2017

தாமதப்படுத்தப்படும் தலமட்டக்குழு 

 ஜூலை 2016ல் பரமக்குடியில் நடைபெற்ற
 மாவட்ட மாநாட்டு முடிவின்படி கீழ்க்கண்ட தோழர்கள் 
காரைக்குடி JCM உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

v.மாரி – AO - மாவட்டச்செயலர் – காரைக்குடி
N.பாலமுருகன் – JE - கிளைச்செயலர் – தேவகோட்டை
B.முருகன் – TT - கிளைச்செயலர் – சிவகங்கை
G.தங்கராஜ் – TT - கிளைச்செயலர் – இராமநாதபுரம்
A.தமிழரசன் – TT - கிளைச்செயலர் – பரமக்குடி

காரைக்குடி மாவட்டத்தில் TEPU, SEWA BSNL போன்ற கூட்டணிச்சங்கங்களும் இல்லை. எனவே 5 இடங்களிலும் NFTE உறுப்பினர்களே நியமனம் செய்யப்பட்டனர். ஏறத்தாழ ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்ட நியமனப்பட்டியல் நிர்வாகத்திற்கு இன்னும் அனுப்பப்படவில்லை.


தமிழ்மாநிலச்சங்கம் அணிசார்ந்த சங்கமாக
 ஆகிப்போன கொடுமையால் இந்த தாமதம் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாகவே நம்ப வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் தூத்துக்குடிக்கு நேர்ந்த நிலையையும் 
நாம் இப்போது  ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. 

சேலத்தில் மார்ச் 4 அன்று நடைபெறவுள்ள மாநில செயற்குழுவிற்கு முன்பாக காரைக்குடி JCM உறுப்பினர்கள் பட்டியல் அங்கீகரிக்கப்படாவிட்டால் மாநில செயற்குழுவில் பங்கேற்பது பற்றி காரைக்குடி மாவட்டச்சங்கம் பரிசீலிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comment:

  1. நடக்கப்போவது NFTE சங்க மாநில செயற்குழுவா இல்லை ஒய்வு பெற்றவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டமா?அல்லது பொழுது போக்கும் இடமா? என தெரியவில்லை அன்றைய தினத்தில் சேலம் செல்லாமல் இருப்பது அனைவரது நேரத்திற்கும் பணத்திற்கும் பாதுகாப்பு, வேறு வேலைகள் இருந்தால் பார்ப்பது நலம். செயற்குழுவாக நடக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் பங்கேற்கலாம். அந்த நம்பிக்கைக்கு வாய்ப்பே இல்லையென்பது துண்டு பிரசுரத்தை பார்த்தாலே தெரிகிறது. கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete