Wednesday 11 January 2017

எம்மதமும்... நம் மதம்...

எம்மதமும் நம் மதம்...
எம்மதமும் நமக்கு சம்மதம்...

மதங்கள் மனங்களை இணைக்க...
மதங்கள் மனிதத்தை வளர்க்க...

புண்படுத்துவதற்கு அல்ல மதம்...
மனிதனைப் பண்படுத்துவதே மதமென...
உலகெங்கும் மனிதத்தின் மாண்பு சொன்ன...

ஏழைகளும்... தரித்திரர்களும்...
உங்களுக்கு கடவுளாகட்டும்....
அவர்களுக்கு செய்யும் தொண்டே...
கடவுளுக்கு செய்யும் தொண்டு என ...

இளைஞர்களை உருக்கேற்றிய...  
இதயங்களை முறுக்கேற்றிய...
சுவாமி விவேகானந்தரை...

ஜனவரி 12...
அவரது அவதார தினத்தில்...
தேசிய இளைஞர் தினத்தில்...
வணங்குவோம்.... வழி செல்வோம்...

No comments:

Post a Comment