Sunday, 19 November 2017

இருள் விலகும்...ஒளி பிறக்கும்…
தணலாய் தகித்த உணர்வுக்குரல் 

உணர்வாய் எழுந்த  உரிமைக்குரல் 

நவம்பர் 9..10..11 
நாட்டின் தலைநகரில்
நாலாதிசைகளிலும் இருந்து 
தொழிலாளர் வர்க்கம்  சாரைசாரையாய்
டெல்லி பாராளுமன்றம் முன்பாகத் திரண்டு
தங்களது கோரிக்கைகளுக்காக ஓங்கிக் குரல்கொடுத்தனர்.

டெல்லி தலைநகர் முழுவதும் செங்கொடிகள்...
காலுக்கு செருப்பு இன்றி… 
மேல்சட்டை கிழிசல்களாக…
கால்சட்டையோ அரைச்சட்டையாகத்
துப்புரவுத்தொழிலாளிகள் 
தோள்களில் செங்கொடி சுமந்து 
குறைந்தபட்சக் கூலி கேட்டு டெல்லித்தெருக்களிலே 
குரல் கொடுத்து வந்த காட்சி..
ஆட்சியாளர்களின் செவிட்டில் அறைந்த காட்சி..

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்
காலுக்கு செருப்பின்றி கால் வயிற்றுக்கு உணவின்றி
அடிமட்டத் தொழிலாளர்கள் அல்லல் படும் நிலை...

போராட்டக்களத்தின் மூன்றாம் நாள் பெண்கள்
பாராளுமன்ற வீதி முழுவதும் நிறைந்து
தங்கள் கோபத்தை கோஷங்களாய் எழுப்பினர்.

தோளிலே தொங்கும் பைகளின் சுமை… 
நெஞ்சிலே குடும்ப சுமை… 
பணிசெய்யும் இடத்தில் பலப் பல சுமை
இத்தனையும் தாங்கி 
தங்கள் கரம் உயர்த்தி சிரம் நிமிர்த்தி
பெண்கள் உரிமைக்குரல் எழுப்பிய காட்சி
காண்போர் உணர்வுகளை மேலும் உரமிக்கதாக மாற்றியது.

ஆனால் ஆளும் வர்க்கமோ… 
அதிகாரிகளோ யாருக்கும் கவலையில்லை...
ஏனெனில் இந்த தேசத்தில் யாருக்கும் வெட்கமில்லை.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான
பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தைப் படம் பிடிக்கவோ…
துயரங்களை எழுதவோ நேரமில்லை… மனமில்லை…
பாவம் அவர்களுக்கு நடிகைகளின் 
அந்தரங்கங்களை அலசவே பொழுது போதவில்லை….

தோழர்.மதிவாணன் அவர்கள் போராட்டக்களத்தின்
கடைசி நாளன்று பத்திரிக்கைகளின் இருட்டடிப்பை
விமர்சனம் செய்து தனது முகநூலில் வெளியிட்டார்.

கொஞ்சம் நஞ்சம் சுரணையுள்ள 
இந்து பத்திரிக்கையும் கூட..
தனது கடைசிப் பக்கத்திலே 
சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது.
சற்றே ஆறுதல் அடைந்தோம்.
ஆனால் அதற்கு பக்கத்திலேயே…
டெல்லியில் நவம்பர் 12 அன்று...
ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி 
என்று செய்தி வெளியிட்டு  
தொழிலாளர்களின் போராட்டத்தை விட
பெரிய படமாகவும் முக்கியச்செய்தியாகவும்  போட்டிருந்தார்கள்...

இந்த தேசத்திலே...
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட
பேரினமான தொழிலாளர் வர்க்கத்திற்கு இல்லை..
என்பது வெட்கத்திலும் வெட்கம்.

பாட்டாளிகளைப் பாராமுகம் பார்க்கும் பாரததேசம்
பரந்து கெடுக என்றே மனம் குமுறுகிறது….

ஆனாலும் 
கோடிக்கால் பூதமாக கோபத்தின் ரூபமாக
தொழிலாளர் வர்க்கம் திரண்ட காட்சி…
மாறும்… எல்லாம் மாறும் 
என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

மாறும் என்பது மாபெரும் தத்துவம்…
இவையெல்லாம் 
ஒருநாள் மாறும்… மாற்றப்படும்…
இருள் விலகும்.. ஒளி பிறக்கும்…
இதுவே…
டெல்லி போராட்டக்களம் தந்த செய்தி...நம்பிக்கை... 

Thursday, 16 November 2017

மகத்தான நூல் வெளியீடு 

தோழர்.மதிவாணன் அவர்கள் எழுதிய
மகத்தான ருஷ்யப்புரட்சியின்
மலரும் நினைவுகள்

நூல் வெளியீட்டு விழா
17/11/2017 – வெள்ளி – மாலை 03 மணி
இராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை
தோழர்களே… வாரீர்…

Wednesday, 15 November 2017

பதக்கங்களும்…பாராட்டுக்களும்...
தோழியர்.கார்த்திகா அவர்கள் சான்றிதழ் பெறும் காட்சி 
தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற வீராங்கனைகளும்... வீரர்களும்... 

நவம்பர் 15 முதல் 17 வரை 
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 17வது BSNL  
அகில இந்தியத் தடகளப்போட்டி நடைபெற்று வருகின்றது. 

காரைக்குடி தோழியர்.கார்த்திகா JTO அவர்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். 

தமிழக மகளிர் அணி 4x400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 

ஆண்கள் அணி 4x400 தொடர் ஓட்டப்பந்தயத்தில்
 வெண்கலம் வென்றுள்ளது. 

தோழர்.எழில்நிலவன் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

தோழர். செந்தில் குமார் நீளம் தாண்டுதலில் 
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

தோழியர்.கார்த்திகா அவர்களுக்கும்...
 அனைத்து தடகள வீராங்கனைகளுக்கும்...
 வீர்ர்களுக்கும் நமது அன்பான வாழ்த்துக்கள்.  

இன்றும்… நாளையும் மேலும் பதக்கங்களைத்
 தமிழகத்திற்குப் பெற்றுத்தந்து 
பெருமை சேர்த்திட வாழ்த்துகின்றோம்.

Tuesday, 14 November 2017

அனைத்து சங்க கூட்ட முடிவுகள்

14/11/2017 அன்று BSNL அனைத்து சங்க கூட்டம் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • 16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.
  • 23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும் DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.
  • 18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். டெல்லி தலைமையகத்தில் 17/11/2017 அன்று கூட்டம் நடைபெறும்.
  • 30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.
  • அகில இந்தியத்தலைமையில் இருந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள்  வெளியிடப்படும். மாநில மட்டத்தில் அவர்களது தாய்மொழியில் வெளியிட வேண்டும்.
  • அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 20/11/2017 லக்னோவில் துவங்கி 08/12/2017 அன்று ஹைதராபாத் நகரில் முடிவுறும். சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.

மனிதச்சங்கிலி - 23/11/2017

16/11/2017 அன்று நாடு முழுவதும் நடைபெறவிருந்த 
மனிதச்சங்கிலி போராட்டம் 23/11/2017 அன்று 
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 14/11/2017 டெல்லியில் நடைபெற்ற
 அனைத்து சங்க கூட்டத்தில் 
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தயாரிப்புடன்…
கூடுதல் பங்கேற்புடன்…
கூடுதல் எழுச்சியுடன்…
மனிதச்சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்..
மனிதச்சங்கிலி
BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புக்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்களே…
BSNL அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் 14/11/2017 அன்று BSNLEU
 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 16/11/2017 அன்று நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி இயக்கத்தை வெகுசிறப்பாக நடத்துவது குறித்து
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மனிதச்சங்கிலி இயக்கத்தில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள்
அனைவரையும் உணர்வுடன் பங்கு பெறச்செய்வது.

குறைந்த பட்சம் 500 தோழர்கள்
மனிதச்சங்கிலி இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்.
பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் 50 தோழர்கள்
சிவகங்கை மற்றும் மானாமதுரை 50 தோழர்கள்
இராமநாதபுரம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் 100 தோழர்கள்
காரைக்குடி,தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் 300 தோழர்கள்.

இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து அனைத்து தோழர்களும் வேன் மூலமாக காரைக்குடி வந்து சேரவேண்டும்.

மனிதச்சங்கிலி மாலை 03 மணிக்கு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவர் சிலையில் இருந்து துவங்கி பெரியார் சிலை வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு கண்ணதாசன் மணிமண்டபம் முன்பாக மனிதச்சங்கிலி நிகழ்வு நிறைவுறும்.

தோழர்களே…
நமது ஊதியமாற்றத்தைப் பெற்றிடவும்….
நமது BSNL நிறுவனத்தைக் கூறு போட்டு
செல் கோபுரங்களுக்காக தனி நிறுவனம் துவங்கத்துடிக்கும்
மத்திய அரசின் BSNL விரோதப்போக்கை எதிர்த்தும்…
நாம் நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்…
அதற்கான தருணம் இது…. அதற்கான போராட்டம் இது…
நமது ஒற்றுமை மூலம் உரிமைகளை வெல்வோம்…

Monday, 13 November 2017

நூல் வெளியீட்டு விழா 


தோழர். C.K.மதிவாணன் 
கருத்தோவியத்தில்

மகத்தான ரஷ்யப்புரட்சியின்
மலரும் நினைவுகள்

சோவியத் புரட்சி... 
நூல் வெளியீட்டு விழா

17/11/2017 – வெள்ளிக்கிழமை...
மாலை 03.00 மணி
இராஜா அண்ணாமலை மன்றம்...
சென்னை.

தோழர்களேஅணி திரள்வீர்
கரம் கோர்ப்போம்களம் காண்போம்...


ஊதிய மாற்றம் அடைந்திட
செல்கோபுரம் துணை நிறுவனம் தடுத்திட

நாடு தழுவிய
மனிதச்சங்கிலிப் போராட்டம்

16/11/2017 – வியாழன்மாலை 03.00 மணி
புதிய பேருந்து நிலையம்காரைக்குடி….

அனைத்து சங்கங்களும்
கரம் கோர்ப்போம்… களம் காண்போம்
எழுச்சி கொள்வீர்தோழர்களே
13/11/1938…
பிறந்தார்… இராமசாமி… பெரியாராக…

பெண்களுக்காக குரல் கொடுத்த…
ஈ.வெ.ராமசாமிக்கு….
பெண்களே கொடுத்தனர்…
ஈடு இணையற்ற பட்டம்….
பெரியார்… பெரியார்… பெரியார்… என்று…

பெண்களுக்கு கல்வி…
பெண்களுக்கு சொத்து…
பெண்களுக்கு உரிமை…
பெண்களுக்கு சமத்துவம்… 

சட்டங்கள் ஆள வேண்டும்…
பெண்கள் ஆணுக்கு இணையாக
பட்டங்கள் பெற வேண்டும்… என
பெரியார் குரல் கொடுத்தார்…

பெண்களோ பெரியார் என்னும்
பெரும் பட்டத்தையே…
பெரியாருக்கு கொடுத்தனர்…

1938 நவம்பர் 13ம் நாள்…
சென்னை பெத்தநாயக்கன் பேட்டை…
பெண்களின் உரிமை மாநாடு…
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்…
திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை அம்மையார்…
மருத்துவர் தர்மாம்பாள்..
மீனாம்பாள் சிவராஜ்…
பண்டித நாராயணி அம்மையார்…
தோழியர் பார்வதி அம்மையார்…
அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார்…
என விடுதலை தாகம் கொண்ட…
வீரத்திருக்கூட்டம் கூடி…

தங்கள் விடுதலைக்கு குரல்கொடுத்த…
பகுத்தறிவுப் பகலவனுக்கு…
தந்தைப் பெரியார் என
பட்டம் தந்த நாள் இன்று…

பெண்கள் விடுதலைப் போரில்…
பெரும்பங்கு கொண்ட…
பெருமை மிக்கத் தலைவனுக்கு...
பெரியார் பட்டம் பொருத்தமன்றோ…

Monday, 6 November 2017

சுதந்திரப்போர்…
தொழிலாளர் விரோத…
மக்கள் விரோத…
மானுட விரோத…
மத்திய அரசை எதிர்த்து…
மக்கள் மன்றம் முன்பு…
மாபெரும் சுதந்திரப்போர்…

நவம்பர் 9 10 11…
நாடாளுமன்றம் முன்பு கூடுவோம்…

குறைந்த பட்சக்கூலி ரூ.18000…
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000…
அடைந்தே  தீருவோம்….
குறைந்த பட்ச உரிமைகளை 
இழந்திட மாட்டோம்...

சுமையினுக்கு இளைத்திட மாட்டோம்…
மீண்டும் ஒரு சுதந்திரம்
அடையாமல் விடமாட்டோம்…
உரிமைப்போர் 

 நவம்பர் 9.. 10… 11
நாடாளுமன்றம் முன்பாக
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைப்போர்…

மக்கள் விரோத
மத்திய அரசைக் கண்டித்து…

தொழிலாளர் விரோத
ஆளும் அரசைக் கண்டித்து…

பொதுத்துறைகளை அழித்திடும்…
பொறுப்பற்ற அரசைக் கண்டித்து…

தோழர்களே… அணி திரள்வீர்…
எல்லைகள் விரியும் NFTCL

ஒப்பந்தத் தொழிலாளரின் 
உரிமை காக்கும் இயக்கமாம் NFTCL... 

திக்குகள் தெரியாது… 
திசைவழி தெரியாது...
திகைத்து நின்ற...
திக்கற்று நின்ற...
தொழிலாளியின் துயர் துடைக்க...
எட்டுத்திக்கிலும் நாளும் பொழுதும்... 
தன் காலூன்றி வருகின்றது…

இதோ சுந்தரத்தெலுங்கினிலே… 
ஆந்திர மாநிலத்திலே...
நெல்லூர் மாவட்டத்திலே... 
05/11/2017 அன்று மிகச்சீரும் சிறப்புமாக
தனது மாநில அமைப்பை NFTCL துவக்கியுள்ளது.

NFTE சம்மேளனச்செயலர் 
தோழர்.அஞ்சையா அவர்களின் தலைமையில்…
NFTCL அகில இந்தியத் தலைவர் 
தோழர்.ஆசிக் அகமது… அவர்கள்..
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர் 
தோழர்.C.K. மதிவாணன் அவர்கள்..
NFTCL அகில இந்திய சங்க நிர்வாகிகள்..
தோழர்கள்.சுப்பராயன்,அசோக்ராஜன்..
NFTCL தமிழக மாநிலச்செயலர் 
தோழர்.ஆனந்தன் ஆகியோர்  பங்கு பெற…

ஆந்திர மாநிலம் முழுவதுமிருந்து...
ஒப்பந்தத்தொழிலாளர்கள்
அலையெனத் திரண்டு வந்து
ஆந்திர மாநில அமைப்பை
அற்புதமாக துவக்கியுள்ளனர்.

கொடியேற்றம்… 
உணர்ச்சிமிகு கோஷங்கள்….
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்….
தலைவர்களின் கருத்தாழமிக்க உரைகள்…
ஒப்பந்த ஊழியர்களின் 
உரிமைக்கான கேள்விகள் என
நெல்லூர் NFTCL மாநில அமைப்பு மாநாடு …
நெஞ்சம் நிறைந்த மாநாடாக 
முத்திரை பதித்துள்ளது.

மாநிலத்தலைவராக தோழர்.பீரா அவர்களும்…
மாநிலச்செயலராகத் தோழர்.ஜீலானி கான் அவர்களும்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடிமட்ட ஊழியரின் அல்லல் போக்கிட…
அயராது பாடுபடும்… அனுதினமும் செயல்படும்…
அருமைத்தோழர். C.K.மதிவாணன் அவர்களின்..
அரும்பணி சிறந்திட அன்போடு  வாழ்த்துகின்றோம்..
NFTE
அகில இந்திய மாநாடு
NFTE
அகில இந்திய மாநாடு
2018 -  மார்ச் 14... 15... 16... 
அமிர்தசரஸ் – பஞ்சாப்

சிரம் நிமிர்த்திய சங்கம்…
கரம் உயர்த்திய சங்கம்…

வாழ்வு தந்த சங்கம்…
வளம் பெருக்கிய சங்கம்…

ஊணாய்… உயிராய்…
உணர்வோடு கலந்த சங்கம்…

இதயக்கோவிலாம்…. 
NFTEயின்...
அகில இந்திய மாநாடு…
பொற்கோவில் நகரிலே…
பொலிவோடு நடைபெறுகிறது…

பொற்கோவில் நகர் திணறட்டும்…
புறப்படுவீர்… தோழர்களே…