Tuesday 13 December 2016

ஹே... ராம்...
அறிவு ஜீவிகளின் பத்திரிக்கையான இந்து நாளிதழின்... 
மூத்த பத்திரிக்கையாளர் திரு N.ராம்...
சின்னம்மா சசிகலாவை.. 
போயஸ் தோட்டத்தில் 13/12/2016 அன்று சந்தித்துள்ளார்...

வெனிசுலா பொருளாதார நெருக்கடி...
எல்லையில் பாக்கிஸ்தானின் அத்துமீறல்...
செல்லாத நோட்டுப்பிரச்சினை...
இல்லாத நோட்டுப்பிரச்சினை..
வந்து போன வார்தா புயல்..
வரவிருக்கும் போயஸ் புயல்...
டிசம்பர் 15 BSNL ஊழியர்கள் வேலைநிறுத்தம்... உட்பட 
பல்வேறு  பிரச்சினைகள் பற்றி... 
சித்தியிடம் சீரியஸாகப்  பேசியுள்ளதாகத் தெரிகிறது...

நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டு.. 
நல்ல  நேரத்தில் சின்னம்மாவை சந்தித்த..
அறிவுக்கொழுந்து  N.ராம் அவர்களின் தேசப்பற்று...
அனைவரையும் புல்லரிக்க வைக்கிறது...

No comments:

Post a Comment