Wednesday 7 September 2016

துதியோசையும்... துன்ப ஓசையும்...

வேலூர் மாநில மாநாடு.. 
இளைஞர்கள் கருத்தரங்கம்...

தோழர்கள் சுதி சேர்த்து துதி பாடிக்கொண்டிருக்கின்றார்கள்...
கருத்தரங்கிற்குத் தலைமையேற்ற ..
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்...
BSNLலில் பணி நியமனம் பெற்ற தோழர்கள் படும் அவதி பற்றி 
தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்...
அவர் எடுத்துரைத்த பல பிரச்சினைகளில் ஒன்று 
EPF எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதிப்பிரச்சினை...

DOT ஊழியர்கள் GPF எனப்படும் பொது வைப்புநிதியை 
மாதா மாதம் துடைத்து எடுத்து விடுகின்றார்கள்...
சங்கங்களும் மாதாமாதம்..
GPF பற்றி எழுதாமல் பேசாமல் இருப்பதில்லை..
ஆனால் EPF எனப்படும் வைப்புநிதி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை...
BSNLலில் பணி  நியமனம் பெற்ற ஊழியர்கள் 
வைப்புநிதியில் இருந்து பணம்  திரும்பப் பெற வேண்டுமென்றால்...
நமது அலுவலகத்தின் மூலம்..
EPF  அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்... 

EPF அலுவலகம் ஊழல்களின் உறைவிடம்...
சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் 
கவனிக்காமல் காரியம்எதுவும் நடக்காது...
எனவே EPF பணம் விண்ணப்பிக்கும் தோழர்கள் 
கொடுப்பதைக் கொடுத்துதான் பெறுவதைப் பெறுகிறார்கள்...

சமீபத்தில்...
காரைக்குடி மாவட்டத்தில் திருவாடானை என்ற ஊரில்...
துணைக்கோட்ட அதிகாரியாகப் பணியாற்றிய 
இராமனையா என்ற BSNL  நியமன SDE மரணமுற்றார்...
அவரது குடும்பத்தாருக்கு  
EPF பணம் திரும்பக் கொடுப்பதில் தாமதம் நிலவியது... 
பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன..,
எல்லாவற்றிற்கும் காரைக்குடியில் இருந்து  பதில் கொடுத்த பின்..
தற்போது அவரது குடும்பத்தாருக்கு
EPF  பணம் திரும்ப பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது..
பட்டுவாடா ஆனதில் நமக்கும்  நிம்மதி...
ஆனால் இராமனையாவின் தந்தையார் தொலைபேசியில் சொன்னார்...
"சார்... பணம் வந்து விட்டது... 
அதில் பத்தாயிரம் லஞ்சமாகப் போய் விட்டது" என...

EPF அலுவலகம் அப்படித்தான் இருக்கும் என 
நீங்கள் சொல்வது நம் காதில் விழுந்தாலும்...
இறந்தவன் குடும்பத்தினரிடம் கூடவா...
இரக்கமற்று நடக்கிறார்கள்... என்ற கோபம் நமக்கு எழுகிறது...

இந்தப் பிரச்சினையைத்தான்..
வேலூர் மாநில மாநாட்டில்... 
தோழர். சுபேதார் அலிகான் 
தானும் ஒரு BSNL நியமனத் தொழிலாளி என்ற வகையில்..
வைப்பு நிதியில் தாங்கள் படும் பாடுகளை எடுத்துரைத்து 
சங்கம் இதில் தலையிட வேண்டும்...
வைப்பு நிதி அலுவலகம் பக்கம்
ங்கத்தலைவர்களின் பாதம் பதிய வேண்டும்..
லஞ்சம் கொடுத்து வைப்பு நிதியைப் பெறும் நிலை மாறவேண்டும்...
என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்...

இதோ...
இன்னும் இந்த துன்ப நிலை தொடர்கிறது...
பத்தாயிரம் லஞ்சம் கொடுத்து 
பாதிக்கப்பட்டவன் குடும்பம் பலன் பெறும் 
துன்ப நிலை... தொடரும் நிலை...

இதற்காகத்தான் வேலூர் மாநில மாநாட்டில்...
தோழர். சுபேதார் குரல் கொடுத்தார்..

என்ன செய்வது?
துதியோசையின் முன்னே...
துன்ப ஓசை எடுபடாமல் போகிறதே?...

1 comment:

  1. Comrade our leaders are intrested in photo sessions rather than othet works. Circle head thought that transfer case GPF case only the duties of unions work. It is very shame that still any level of JCM has been formed even after 5month

    ReplyDelete