Monday 5 September 2016

போ... செப்டம்பர்...
செப்டம்பர் மாதம்...
பல நாடுகளில் அறுவடையின் மாதம்...
பல நாடுகளில் பள்ளிகள் திறக்கும் மாதம்...
உலகில்..  செப்டம்பர்..
வசந்தத்தின் நுழை வாயில்...
COME... SEPTEMBER..  என்று 
உலகம்  செப்டம்பரை வரவேற்கும்...

ஆனால்.. இந்திய தேசம் மட்டும் 
செப்டம்பரை... GO... SEPTEMBER 
போ...  செப்டம்பர் என்றே சொல்லும்...
காரணம்... இங்கு மட்டும்...
செப்டம்பர் மாதம் போராட்டங்களின் மாதம்...

இங்கு ஆட்சிகள் மாறுகின்றன...
ஆனால் போராட்டக் காட்சிகள் மட்டும் மாறவேயில்லை...

இந்திய  அரசியல் அமைப்புச்சட்டம்..
1949..  நவம்பர் 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு...
1950.. ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது...

இந்திய  அரசியல் அமைப்புச்சட்டம்..
தோன்றும் முன்னே.. குறைந்த பட்சக்கூலி சட்டம் 
1948.. மார்ச் 15ல் தோன்றியது...
கூலி பட்டுவாடா சட்டம் 1936... PAYMENT OF WAGES ACT 1936..
அதற்கும் முன்னே தோன்றியது..


குறைந்த பட்சக்கூலி என்பதற்கு சட்டம் இருந்தாலும்...
இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து.. 
குறைந்தபட்சக்கூலி உயர்விற்காக குரல் கொடுத்து வருகிறது...
ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம்... 
கூலிக்காக... போராடும் மாதமாக மாறிவிட்டது...

இந்த ஆண்டு...
கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாது...
பெரும்பகுதி அரசு ஊழியர்களும்...
பொதுக்கோரிக்கைகளோடு தங்களது
கோரிக்கைகளுக்காகவும்...களம் இறங்கினர்...

கோடிக்கால் பூதமென... கோடிக்கணக்கான தொழிலாளர்கள் 
நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்தனர்...
நாற்சந்திகளில் மறியல் செய்தனர்...

நாட்டின்  நிதி அமைச்சர் 
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சக்கூலி ரூ.350/- என்றும்..
மாதத்திற்கு ரூ.9100/- என்றும் பேரம் பேசினார்...

இத்தனை காலம் ஆண்டவர்களை விட...
ஆளும் எங்களுக்கு தொழிலாளி மேல் அக்கறை உண்டு 
என ஆளும் அமைச்சர்கள்  வியாக்கியானம் செய்தனர்...

விடை சொல்ல வேண்டிய பிரதமர்.. 
வீட்டுப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய பிரதமர்..
வீட்டை விட்டு  விமானம் ஏறி வியட்நாம் சென்று விட்டார்...

அற்ப சலுகைகளைக் காட்டி அரசு ஆசை காட்டினாலும்...
தொழிலாளி வர்க்கம் உறுதியோடு நின்று 
உலகின் மாபெரும் வேலை நிறுத்தத்தை
ஒற்றுமையோடு நாடு முழுக்க நடத்தியுள்ளது...

 நமது நெஞ்சார்ந்த நன்றியையும்...வாழ்த்துக்களையும்...
தோழர்களுக்கு நாம் உரித்தாக்க வேண்டும்...

நமது நன்றியும்... வாழ்த்துக்களும்...
ஒரு நாள் சம்பளம் இழந்தவர்களுக்கும்...
விடுப்பெடுத்த வீரர்களுக்கும் அல்ல...

மாறாக... அதோ 
அத்தக்கூலிகளாக... அன்றாடங்காய்ச்சிகளாக ...
நித்தம் வாழ்வில் போராடும்...
காலுக்கு செருப்பில்லாத ... கண்கவர் உடையில்லாத..
கொளுத்தும் வெயிலில்... குளிக்கும் வியர்வையில்..
உருகும் தார் ரோட்டில்...கையில் செங்கொடியுடன்... 
உணர்வுடன்  அமர்ந்து... துணிவுடன் நிமிர்ந்து..
ஆளும் குப்பைகளின் அலட்சியம்  எதிர்த்துப் போராடிய..
துப்புரவுத் தொழிலாளிக்கு நமது செவ்வணக்கங்கள்...

No comments:

Post a Comment