Wednesday 14 September 2016

ஒழிந்தது...ஓய்வூதியச்சுமை...

BSNL ஊழியர்களின் ஓய்வூதியச்சுமை அனைத்தும்
அரசிற்கே பொறுப்பாகும் என்பது தோழர் குப்தாவால் 
அரசுடன் போடப்பட்ட செப்டம்பர் 2000  உடன்பாடு.

ஆனால் அரசு தன் கடமை மறந்து  
BSNLலில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின்
 ஓய்வூதியச்செலவில்... அரசிற்கு BSNLலில் இருந்து  கிடைக்கும் வருவாயில்  60 சதம் மட்டுமே ஈடு செய்ய முடியும்
 என 15/06/2006 அன்று உத்திரவிட்டது.  

இதனைத் தோழர் குப்தா மிகக்கடுமையாக எதிர்த்தார்.
 அவர் உயிர் நீத்தாலும் BSNLலில் உள்ள அனைத்து அமைப்புக்களும்.. குறிப்பாக ஓய்வு பெற்ற தோழர்கள் தொடர்ந்து போராடி அந்த உத்திரவை முறியடித்தனர்.  பத்தாண்டுகளுக்குப்பின்  DOT தனது 
15/06/2006 உத்திரவை ரத்து செய்து 
20/07/2016 அன்று உத்திரவிட்டது. 

தற்போது   DOTயின் 20/07/2016 தேதிய  உத்திரவை 
BSNL வழிமொழிந்து 14/09/2016 அன்று
 மாநில நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது. 

DOTயின் 20/07/2016 உத்திரவில் 
3 முக்கியப் பிரச்சினைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

  • 01/10/2000க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஒட்டு மொத்த ஓய்வூதியச்செலவும் அரசையேச் சார்ந்தது. BSNLக்கு எந்தவித செலவினமும் இல்லை.
  • 01/10/2000க்குப் பின்பு ஓய்வு பெற்ற... மரணமுற்ற ஊழியர்களின் ஓய்வூதியச்செலவில் அரசிற்கு BSNL மூலம் கிடைக்கும் வருவாயில் 60 சதம் மட்டுமே ஈடு செய்யப்படும் என்ற அரசின் 15/06/2006 உத்திரவு ரத்து செய்யப்படுகிறது.
  • BSNL  நிறுவனம் தனது ஓய்வூதியப் பங்களிப்பை  FR 116 விதியின் கீழ் வழக்கம் போல் செலுத்தும்.
BSNL ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தைத்தந்த...
ஓய்வூதியத்தின் தந்தை தோழர் குப்தாவின் 
ஆன்மா இப்போதுதான் இளைப்பாறும்.

6 comments:

  1. குப்தா and வள்ளிநாயகம் சாதனை

    ReplyDelete
  2. FNTO வள்ளிநாயகம் மறந்து விடக்கூடாது

    ReplyDelete
  3. FNTO வள்ளிநாயகம் மறந்து விடக்கூடாது

    ReplyDelete
  4. குப்தா and வள்ளிநாயகம் சாதனை

    ReplyDelete
  5. குப்தா and வள்ளிநாயகம் சாதனை

    ReplyDelete
  6. குப்தா and வள்ளிநாயகம் சாதனை

    ReplyDelete