Tuesday 27 September 2016

நியாயம் வெல்லும் 

பரமக்குடி... தமிழகத்தில் சாதி மோதல்கள் நிறைந்த இடம்.
மக்கள் மோதிக்கொண்டாலும் தொலைபேசித்தோழர்கள் 
அன்றும் இன்றும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்...
காரணம்... அய்யர் என்ற அருமைத்தோழர் வெங்கடேசன் 
விதைத்த அன்பென்னும் விதையும்..
அதை உரமிட்டு  வளர்த்து மரமாக்கிய 
இராமசாமி போன்ற தோழர்களின் உழைப்பும்...

ஆனால் அத்தகைய இடத்தில்... 
இன்று சண்டாளன் ஒருவன்  சாதி என்னும் விஷத்தை தூவுகிறான்..
அவனுக்கு நிர்வாகம் குறுக்கு வழியில் மாற்றல் இடுகிறது...

இந்த அநியாயத்தை  எதிர்த்து 
பரமக்குடி தோழர்கள் குரல் கொடுத்தார்கள்...
நிர்வாகத்துடன்  பேச்சுவார்த்தை நடைபெற்றது....

சாதி என்னும் நெருப்பெரித்து...
பரமக்குடியில் அமைதியை சாம்பலாக்கும்...
சக ஊழியர்கள் மீது சாதி என்னும் சாணிவீசும் 
சம்பந்தப்பட்ட ஊழியரின்   கொடுமையை எதிர்த்து...
பாதிக்கப்பட்ட தோழர்களால் கொடுக்கப்பட்டுள்ள  
எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளின் மீது 
பரமக்குடியில் உரிய விசாரணை நடத்தப்பட்டு...
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 
இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முடிவாகியுள்ளது.

உணர்வோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்...
அமைதியான தீர்வை எட்டுவதற்கு... 
உதவிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள்...

நியாயங்கள் நிச்சயம் தோற்காது... காத்திருப்போம்...

1 comment:

  1. அட போங்க தோழர் இது நிர்வாகத்துக்கு தெரியாதா என்ன? இல்லை மாற்று சங்கத்திற்கு தான் தெரியாதா என்ன? இருவரையும் மோத விட்டு குளிர் காயும் எண்ணம் இருக்காதா என்ன? பொதுவுடைமை பேசும் இவர்கள் , ஒரு ஜாதி வெறியனுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு போனதற்கு காரணம் என்ன?

    ReplyDelete