Monday 19 September 2016

அரசிதழும்... அரசியலும்...
gazette india க்கான பட முடிவு
 This is an authorised legal document of Government of India.


இந்திய அரசிதழ் இந்திய அரசின் சட்டப்பூர்வ  ஆவணமாகும். 
இதில் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு உரிய கால 
இடைவெளிக்குப்பின் உத்திரவாக அறிவிக்கப்படும்.

இப்படித்தான் 30/03/2016 அன்று ஒப்பந்த ஊழியர்களின் மாதக்கூலியை ரூ.10000/- என உயர்த்துவதாகவும்... இதற்காக குத்தகைத்தொழிலாளர் ஒழிப்புச்சட்டம் 1971ன்படி குறைந்தபட்சக்கூலி சட்டம் 1948 விதி 11ஐ திருத்துவதாகவும் இந்திய அரசிதழில் இந்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு செய்திருந்தது. மேற்கண்ட திருத்தத்தில் பொதுமக்களுக்கு ஏதேனும் கருத்து இருந்தால் 
ஒரு மாத கால இடைவெளிக்குள் தெரியப்படுத்த வேண்டும் 
எனவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அறிவிப்பு செய்யப்பட்ட 5 மாதங்கள் கழித்தும் 
 மேற்கண்ட அரசிதழ் அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. காரணம் இந்தியப்பெருமுதலாளிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனராம்.

இதனிடையே செப்டம்பர் 2 போராட்டத்தை முறியடிக்கும் பொருட்டு ஒப்பந்த ஊழியர்களின் நாள் கூலியை உயர்த்தி 01/09/2016 அன்று மீண்டும் இந்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 
அரசிதழில்  அறிவிப்பு செய்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி....

திறனற்ற UNSKILLED தொழிலாளர்களுக்கு 
A பிரிவு நகரில் நாள் கூலி - ரூ.523/-
B  பிரிவு நகரில் நாள் கூலி - ரூ.437/-
C பிரிவு நகரில் நாள் கூலி - ரூ.350/-
என உயர்த்தப்படவிருப்பதாகவும்...

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையான 
VDA எனப்படும் விலைவாசிப்படி 
A பிரிவு நகரில் 1.93 சதமும்...
B  பிரிவு நகரில் 1.61 சதமும்...
C பிரிவு நகரில்  1.29 சதமும்...
உயர்ந்துள்ளதாகவும்....
மேற்கண்ட கூலி உயர்வு
01/01/2016 முதல் அமுலுக்கு வரும் என்று 
அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது...

மேற்கண்ட கூலி உயர்வு அறிவிப்பில் 
ஏதேனும் கருத்து மாறுபாடு இருந்தால் 
மேற்கண்ட அரசிதழ் அறிவிக்கப்பட்ட
60 நாட்களுக்குள் அரசிற்கு எழுத்து மூலம் 
தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாத  அரசிதழ் அறிவிப்பு 
கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில்...
செப்டம்பர் மாத அறிவிப்பின் கதி என்ன என்பதை 
நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் இந்திய தேசத்தில்...
அரசிதழ்களின் அதிகாரத்தை விட 
அரசியலின் ஆதிக்கமே செல்லுபடியாகும்....

No comments:

Post a Comment