Monday 29 August 2016

சிரித்து வாழ வேண்டும்...
நகைச்சுவை மருத்துவர் கலைவாணர்
நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் 
1957...
சென்னை அரசு மருத்துவமனை..
NSK இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்...
அந்த மருத்துவமனை வளாகத்தில்...ஒருவர்..
அழுத கண்ணீரோடு நிற்கிறார்...
காரணம் என்னவென்று சிலர் விசாரிக்கிறார்கள்...
தனது மகளின் திருமணத்திற்கு உதவி கேட்டு
NSKஐப்பார்க்க வந்ததாகவும்... 
அவரது கெட்ட நேரம்..
NSK உடல் கெட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும்  கூறினார்...

சம்பவம் NSKயின் காதிற்கு எட்டுகிறது...
வீட்டில் தனது கடைசி சொத்தாக உள்ள 
வெள்ளிக்கூஜாவை எடுத்து வரச்சொல்கிறார்...
தன்னிடம் உதவி கேட்டு வந்தவரை அழைத்து வரச்சொல்கிறார்..
வந்தவரிடம் அதைக்கொடுத்து..
"என்னிடம் இப்போதைக்குப் பணமில்லை...
இதை விற்று உங்கள் மகளின் திருமணத்தை முடியுங்கள்"
என்று அன்போடு கொடுக்கிறார்...

செத்தும் கொடுத்தவன் சீதக்காதி...
சாகும் நிலையிலும் கொடுத்தவன் கலைவாணன்...

அவரது வருமான கணக்குகளை 
ஆய்வு செய்ய வந்த அதிகாரி ஒருவர் ... 
செலவுகளில் பெரும்பகுதி தர்மம்... தர்மம்.. என்று 
எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து சந்தேகம் கொண்டார்...
NSKயின் கணக்குப்பிள்ளை 
"தர்மம்" என்ற செலவு கணக்கு உண்மைதான் என்றும் 
நீங்கள் அதைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறி விட்டார்..

அதிகாரி அதற்கு முன் NSKஐ சந்தித்ததில்லை...
அவர் தன்னை யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் 
சாதாரண உடையில் NSKஐ சந்தித்தார்...
தான் வறுமையில் வாடுவதாகவும்...
தனது மகளின் திருமணத்திற்கு உதவி வேண்டும் எனவும் வேண்டினார்...
உடனே சில பணக்கட்டுக்களை எடுத்து...
அவரிடம் நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்... NSK..

என்னை யாரென்று உங்களுக்குத் தெரியாது...
ஆனாலும் உடனடியாக உதவி செய்து விட்டீர்களே"
என அவர் கேட்டார்...
அறிமுகம் பார்த்து செய்வதில்லை உதவி ...
வாடியமுகம் பார்த்து செய்வதுதான் உதவி" என்று NSK கூறுகிறார்...
அதிகாரி சொன்னார்...

ஐயா...நீங்கள் கிருஷ்ணன் அல்ல.... கர்ணன்" 


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு 
சொந்தமானது சிரிப்பு...
இது... கலைவாணர் சிரிப்பைப் பற்றி எழுதிய பாடல்...

அவரது நகைச்சுவை மக்களை 
சிரிக்க வைத்தது... சிந்திக்க வைத்தது... 

சிரித்து சிவந்தது மக்கள் முகம்...
கொடுத்துச் சிவந்தது அவரது கரம்...

பணத்துக்கும்...பதவிக்கும் ஆலாய்ப் பறக்கும் காலமிது...
தனது சிரிப்பும் சிந்தனையும் இறுதியாக...அடங்கும் வேளையிலும்..
எளியவருக்கு கொடுத்து உதவிய NSK நினைவைப் போற்றுவோம்..

பொதுவுடமைத்தீ வளர்த்த பட்டுக்கோட்டை 29வயதில் மறைந்தார்..
விடுதலைத்தீ வளர்த்த பாரதி 39ல் மறைந்தார்..
சிரிப்பு வேள்வி வளர்த்த கலைவாணர் 49ல் மறைந்தார்...
கள்ளமற்ற சிரிப்பு கலைவாணரைக் கூடுதல் காலம் வாழ வைத்ததோ..?

இன்று...
30/08/2016...
கலைவாணர் நினைவு நாள்....

1 comment:

  1. எத்தனை சிறிய மனிதனுக்கு எத்தனை பெரிய மனம் இருக்கு, எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு என்ற பாடலுக்கு ஏற்ப சில பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகளை கண்டும் கண்டுகொள்ளாமல் வாழ வேண்டிய சுழலில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். பொதுவுடமைத்தீ வளர்த்த பாரதி போன்ற சில நேர்மையான மனிதர்கள் வாழ்வதால்இவ்வுலகம் இயங்குகிறது.பாரதி பற்றி பேசுபவர்கள் ஒருசில பெரியதலைவர்கள் மட்டுமே அதை பின்பற்றி வாழ்கின்றனர்.

    ReplyDelete