Thursday 28 July 2016

அஞ்சலி 
கவிஞர்  ஞானக்கூத்தன்

பிறப்பால் கன்னடர்..
எழுத்தால் தமிழர்...
சிந்தனையால் தோழர்...
நவீன கவிதை உலகின் முன்னோடி..
பகடி என்னும் நகைச்சுவையின் அடையாளம்..
கவிஞர்  ஞானக்கூத்தன்
மறைவிற்கு நமது அஞ்சலி...
---------------------------------------------------------------------------------
உங்களின் வாசிப்பிற்கும்... நேசிப்பிற்கும்  அவரது கவிதைகள் சில...
---------------------------------------------------------------------------------
தோழர்.மோசிகீரனார்...

மோசிகீரா... உன்மேல் அளவற்ற அன்பு 
இன்றெனக்குத் தோன்றியது...
அரசாங்கக்கட்டிலில் தூக்கம் போட்ட 
முதல் மனிதன் நீ என்னும் காரணத்தால்...
---------------------------------------------------------------------------------
கொள்ளிடத்து முதலைகள்

சிறிது... பெரிதாய் முதலைக்கூட்டம் 
சற்றும் அமைதி கலையாமல் 
அவை பேசிக்கொள்ளும்...

சில நொடிகளுக்குள் முடிவெடுத்துக் 
கலையும்  முன்னே...
குறுங்காலால்... மணலில் 
அவை எழுதிப்போட்ட..
மர்ம மொழித்தீர்மானம் 
என்ன கூறும்?
-------------------------------------------------------------------------------------------------------------------------

சரிவு  
சூளைச்செங்கல்  குவியலிலே...
தனிக்கல் ஒன்று சரிகிறது....

No comments:

Post a Comment