Saturday 4 June 2016

 முகமது  அலி... THE GREATEST...
பஞ்ச்ல் பழுத்தவன்...   நெஞ்சில் நிலைத்தவன்..

குத்துச்சண்டையை... 
குக்கிராமம் அறிய வைத்தவன்...
வக்கிரம் கொண்ட...
நிறவெறியை நாக் அவுட் செய்தவன்..

அமெரிக்க இராணுவத்தை எதிர்த்தவன்..
வியட்நாமிற்கு எதிராகப்  போர் புரிய மறுத்தவன்..

கையுறையில் கவிதை எழுதியவன்...
மெய்யுறையும் இஸ்லாத்தை தழுவியவன்...

பார்க்கின்சன் நோயோடு..
பலசுற்றுப்  போராடி வென்றவன்...

தமிழகத்தில் விருந்தாய் தடம் பதித்தவன்..
இதயக்கனி MGRன் இதயங்கவர்ந்தவன்...

பட்டாம்பூச்சி போல் பறக்கச் சொன்னவன்...
தேனீ  போல்  உழைக்கச் சொன்னவன்...

குத்து மதிப்பு உலகில்... 
குத்தில் மதிப்பாய் வாழ்ந்த... 
முகமது அலி 
நினைவைப் போற்றுவோம்...

No comments:

Post a Comment