Saturday 7 May 2016

BSNL நேரடி ஊழியர்களுக்கான ஓய்வூதியப்பலன் 

BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என 
நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. 

BSNL தனது பங்காக 12 சத பங்களிப்பைச்செய்ய வேண்டும் 
என்பது நமது  கோரிக்கையாகும். 78.2 சத IDA  இணைப்பிற்கான போராட்டக் கோரிக்கைகளுள் மேற்கண்ட கோரிக்கையும் ஒன்று.  

தற்போது மேற்கண்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு 
BSNL வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் BSNLன் பங்களிப்பு 
3 சதம் என்று கூறப்படுகின்றது. 

 பங்களிப்பை 12 சதமாக உயர்த்துவதற்கான 
நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். 

மேலும் 01/10/2000க்குப்பின் BSNLலில் நிரந்தரம் பெற்ற சில தோழர்கள் மரணமுற்றுள்ளனர். அத்தகைய தோழர்களின் குடும்பத்திற்கு எந்தவித ஓய்வூதிய பலனும் கிட்டவில்லை. எனவே அத்தகைய குடும்பங்களுக்கும் ஓய்வூதியப் பலனை அளிக்க வேண்டும் என நமது சங்கம் 
BSNL  நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. 

பல ஆண்டுகளாக மேற்கண்ட பிரச்சினையில் 
பாராமுகம் காட்டி வந்த 
 HIGH QUOTATION   BSNLEU சங்கம் 
நாங்கள் 300 சதம் கேட்டோம்...
NFTE 3 சதத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டது 
என்று கூரையேறி கூவப்போவது சர்வ நிச்சயம். 

எப்படியோ... BSNL ஊழியர்களுக்கான ஒரு ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை நடைமுறையாவதில் நமக்கு மகிழ்ச்சியே...

BSNLலில் நியமனம் பெற்ற  நமது  இளைய  தோழர்கள் 
இதனை உணர்ந்து  கொள்ள வேண்டும்.
இடைவிடாமல் அவர்கள் நலனுக்காகப் பாடுபடும் 
இணைந்த கரங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

No comments:

Post a Comment