Saturday 7 May 2016

செய்திகள்

சென்ற பிப்ரவரி 2016ல் 269ல் இருந்து இரண்டு புள்ளிகள் குறைந்து 
267 ஆன CPI  விலைவாசிப்புள்ளி மார்ச் 2016ல் மீண்டும் ஒரு புள்ளி உயர்ந்து 268 ஆகியுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதப் புள்ளி உயர்வின் அடிப்படையில் ஜூலை மாத IDA நிர்ணயம் செய்யப்படும்.
===============================================
போன்மெக்கானிக் பயிற்சி முடித்திருந்தும் TM  காலியிடங்கள் இல்லாத காரணத்தால் இன்னும் பல மாநிலங்களில் தோழர்கள் TM பதவி உயர்விற்கு காத்திருக்கின்றனர். அத்தகைய தோழர்களை காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் TM பதவியில் அமர்த்திடக் கோரி 
நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
===============================================
2015-16ம்  ஆண்டிற்கான JTO மற்றும்  TTA நேரடிப்  பதவிகளை   நிரப்பிட உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாநில நிர்வாகங்களை BSNL நிர்வாகம் பணித்துள்ளது. மாநில நிர்வாகங்கள் தேவையான விவரங்களை 15/05/2016க்குள் அனுப்பிட உத்திரவிடப்பட்டுள்ளது.  

JTO  மொத்தக்காலியிடங்கள் = 2510 
தமிழகத்தில்  காலியிடங்கள் = 103

TTA   மொத்தக்காலியிடங்கள் = 2700 
 தமிழகத்தில்  காலியிடங்கள் =  198

No comments:

Post a Comment