Monday 11 April 2016


SEWA BSNL - புது டெல்லி

மரியாதைக்குரிய மூத்த தலைவர்கள்...
மத்திய சங்கத்தலைவர்கள்..
மாநிலத்தலைவர்கள்... மாநிலச்செயலர்கள்...
மாவட்டத்தலைவர்கள்.. மாவட்டச்செயலர்கள் 
கிளைத்தலைவர்கள்... கிளைச்செயலர்கள்...
மற்றும் நமது அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் 
அனைவருக்கும் வணக்கம்...
  
டெல்லியில் 28/03/2016 அன்று நடைபெற்ற 
நமது 4வது அகில இந்திய மாநாட்டில் 
நீங்கள் அளித்த பேராதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றி...

தோழர்களே...
நமது SEWA BSNL அமைப்பு சார்பாக 
BSNLEU சங்கத்திற்கு கடந்த 3 சரிபார்ப்புத்தேர்தல்களிலும் 
சில நிபந்தனைகள்  மற்றும் கோரிக்கைகளின் பேரில்.. 
நமது உள்ளம் திறந்த பேராதரவை அளித்தோம்.
நமது பேராதரவுடன் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற  
BSNLEU சங்கம்  துரதிருஷ்டமாக  
நம்முடன் போடப்பட்ட 
உடன்பாட்டு நிபந்தனைகளையும், கோரிக்கைகளையும் 
மனப்பூர்வமாக நிறைவேற்றத்தவறி விட்டது.

மேலும் தங்களுக்கு...
அங்கீகாரம் என்னும் அதிகாரம் கிட்டியபின்பு 
SC/ST ஊழியர்களை 
BSNLEU சங்கம் மோசடி செய்யத்தொடங்கி விட்டது. 

உதாரணத்திற்கு...
நாலு கட்டப்பதவி உயர்வில் 
SC/ST ஊழியர்களுக்கான 
சேவைக்கால அளவு குறைக்கப்படும் என்று 
அவர்கள் கொடுத்த வாக்குறுதியை 
அவர்களே காற்றில் பறக்க விட்டு 
நம்மைத் துன்பத்தில் தள்ளி விட்டனர்.

நமது வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற  BSNLEU சங்கம் 
அகில இந்திய, மாநில மட்ட மற்றும் தலமட்ட கூட்டுக்குழுக்களில் 
நமக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதாக சத்தியம் செய்திருந்தது. இதைப்போலவே... சேமநலக்குழு.. பணிக்குழு மற்றும் விளையாட்டுக்குழுக்களில் நமக்குப் பிரதிநிதித்துவம்  கொடுப்பதற்கும் உறுதி அளித்திருந்தது. ஆனால் கடைசி வரை எந்த உறுதிமொழியையும் BSNLEU சங்கம் நிறைவேற்றவில்லை.

மொத்தத்தில் BSNLEU சங்கம் 
நமது SEWA BSNL அமைப்பிற்கு முற்றிலும்  மோசடி செய்து  விட்டது.. 
மேலும் நமது அமைப்பின் உள் விவகாரங்களில் தலையிட்டு... 
நமது அமைப்பின் ஒற்றுமையை 
BSNLEU சங்கம் சிதைக்கத் துணிந்து விட்டது.
அதனது மோசமான செயலால் 
நமது ஒற்றுமை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

சோலாப்பூர் அகில இந்திய மாநாட்டில் இருந்து 
தற்போதைய 4வது டெல்லி அகில இந்திய மாநாடு வரை..
நமது அமைப்பிற்கு 
BSNLEU  சங்கம் செய்த துரோகங்கள் சொல்லி மாளாது...

தங்களது சுய லாபத்திற்காக.. 
நமது அமைப்பில் இருந்த சில எதிர்ப்பாளர்களைத் தூண்டி விட்டு
நமது அமைப்பை  முற்றிலும் சிதைக்கவும்.. சீர்குலைக்கவும்...
BSNLEU சங்கம் தன்னால் முடிந்த அளவு நரித்தனம் செய்தது...
பிரித்தாளும் சூழ்ச்சியை கைக்கொண்டு
நமது அமைப்பிற்கு சிறுமை அளித்திட 
BSNLEU மிகவும் பிரயத்தனப்பட்டது...

சோலாப்பூர் அகில இந்திய மாநாட்டில் 
ஜனநாயக  முறைப்படி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும்...
நமது அமைப்பில் இருந்து விலக்கப்பட்ட ஒருவரை 
சட்டவிரோதமாக... மனசாட்சிக்கு விரோதமாக... 
பொதுச்செயலர் என்று இவர்கள் அறிவித்தனர்... 
பல மாநிலங்களிலும் இத்தகைய மோசமான செயலை அரங்கேற்றினர்...

இவ்வாறாக  தனது மதிப்பிழந்த செயல்களால் .. 
SC/ST ஊழியர்களுக்கும்  அதன் அமைப்பிற்கும்...
BSNLEU சங்கம் செய்த துரோகம்  
நம்மால் மன்னிக்க முடியாதது...மறக்க முடியாதது..

இத்தகைய சூழலில்...
SC/ST  ஊழியர் விரோத BSNLEU சங்கத்தை 
வரும் சரிபார்ப்புத்தேர்தலில் வீழ்த்தவும்...

நமது உரிமைகளை வென்றெடுக்க...
NFTE BSNL இயக்கத்தை ஆதரிக்கவும்...
நாம் முடிவு செய்துள்ளோம்...

எனவே நமது ஊழியர்களின் உரிமைகளை மீட்டிட...
மே..10ல் NFTE இயக்கத்திற்கு நமது வாக்குகளை அளிப்போம்...
தோழர்கள் நமது முடிவை ஏற்று செயல்படுத்துவீர்கள் என நம்புகிறோம்..

தோழமையுடன்...
PN.பெருமாள் 
அகில இந்தியத்தலைவர் 

ND.ராம் 
அகில இந்தியப் பொதுச்செயலர்..
SEWA BSNL - புதுடெல்லி.

==================================================================

தோழர்களே..
SEWA BSNL  அமைப்பின் மேலே கண்ட 
சுற்றறிக்கையை படித்தவுடன்...
நம் மனம் தீயில் வெந்தது  போல் நொந்து  விட்டது...

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே 
உண்மையான விடுதலை என 
மாவீரன் பகத்சிங் சொன்னான்...
பொதுவுடைமை சிவப்பும்...
ஒடுக்கப்பட்டோரின் நீலமும்...
ஒன்று சேர வேண்டும் என்ற 
மாபெரும் தத்துவத்தை அடிமை இந்தியாவில் 
அவன் உரக்கச்சொன்னான்...

அவனது குரலைத்தான்.. JNUவில்..
சுதந்திர இந்தியாவில்...
கன்னையாகுமார் இன்று எதிரொலித்தான்.. 

ஆனால்...
இடதுசாரி  சிந்தனை கொண்ட ஒரு இயக்கம்...
ஒடுக்கப்பட்ட ஊழியர்களின் அமைப்பை 
சிதைக்க நினைத்ததை சிந்தித்தாலே..
மனம் வேதனை  கொள்கிறது...

தேர்தல்கள் வரலாம்.. போகலாம்...
தேர்தல்களில் சறுக்கல்கள்  வரலாம்..  போகலாம்...
ஆனால்...
கொண்ட கொள்கையில் சறுக்கல்கள்..
காலத்தால் அழியாத அவமானங்கள்...

No comments:

Post a Comment