Monday 18 April 2016

பாதயாத்திரை 

BSNLEU சங்கத்தை நம்பிக்கெட்ட SEWA-BSNL அமைப்பு 
SC/ST  ஊழியர்களுக்கும், SC/ST அமைப்பிற்கும்
BSNLEU  இழைத்த இன்னல்கள் பற்றி 
வேதனையோடு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது 
நமது தோழர்கள் அனைவரும்  அறிந்ததே. 

சளைக்காமல்... களைக்காமல்...
சால்ஜாப்புக்கள் சொல்வதில் சாதனை புரியும்...
BSNLEU சங்கம் வழக்கம்போலவே...
தனது சால்ஜாப்பு  பதிலொன்றை வெளியிட்டிருந்தது...

அத்தனை விளக்கமும் .. அடிப்படையற்றது...
அனைவரையும் ஏமாற்றுவது என்பது 
அடிமட்ட ஊழியருக்கும் புரிந்த விஷயம்தான்..

ஆனால் நமக்கு வேடிக்கையாகத் தெரிந்த  விஷயம்  என்னவென்றால்..
SEWA-BSNL பொதுச்செயலர் தோழர் N.D.ராம் அவர்கள் 
பாட்னாவிற்கு விமானத்தில் பறந்து சென்றாராம்...
அதுவே அவரது நேர்மைக்குச்சான்றாம்...

அப்படியானால்.. 
மேன்மை தங்கிய BSNLEU தலைவர்கள்...
பல்வேறு இடங்களுக்கும் பறந்து பறந்து.. செல்கின்றனரா? 
அல்லது படத்தில் கண்டது போல் 
பாதயாத்திரையாக செல்கின்றனரா?
என்ற கேள்வி பாமரத்தொழிலாளியின் மனதில் எழுகிறது...

தோழர்.குப்தாவின் எளிமை உலகறிந்தது...
சாதாரண இரயில் பெட்டியில் 
ஆயிரக்கணக்கான மைல்கள்...
நாள்கணக்கில்.. பயணம் செய்வார்...
அவரையே நாக்கூசாமல் விமர்சனம் செய்த இவர்கள் 
 N.D.ராம் அவர்களை... விட்டு விடுவார்களா?

தோழர் N.D.ராம் அவர்களை...
விமர்சனம் செய்வோரின் மற்ற மூன்று விரல்களும்.. 
அவர்கள் மார்பினைக் சுட்டிக்காட்டுவது இயற்கையே...

No comments:

Post a Comment