Friday 1 April 2016

எல்லா நாளும்... ஏப்ரல் 1தான்..

இன்று...ஏப்ரல் 1...
உலக முட்டாள்கள் தினம்...
BSNLEU.. சங்கம் போனஸ் கேட்டு  ஆர்ப்பாட்டம்...

ஏப்ரல் 1ல்..
உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை  கேட்டு...
உலக மகா சங்கமாகிய BSNLEU.. அறிவித்த
உலகம் மிரளும்  போராட்ட அறிவிப்பைக் கேட்டு...
உணர்ச்சி மிகுதியால் புல்லரித்து விட்டது...  BSNL ஊழியர்களுக்கு...

சட்டையில் மை அடித்து.. சகலரையும் ஏமாற்றி ..
ஏப்ரல் 1ஐக் கொண்டாடிய...
நமது அறியா இளம் பருவம்  நினைவுக்கு வந்து விட்டது...
BSNLEU மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டுள்ளது...

BSNL நிறுவனத்தில் BSNLEU சங்கம்
அங்கீகாரம் அடைந்த பின்பு
ஊழியர்களுக்கு எல்லா நாளுமே ஏப்ரல் 1தான்..
BSNLம் .. BSNLEUம்.. MOU போட்டு நாள்தோறும்..
ஊழியரை ஏமாற்றி வருவது ஊரறிந்த உண்மை...

இத்தகைய நிலையில்...தனிச்சிறப்பாக இந்த வருடம்.. 
ஏப்ரல் 1ஐக் கொண்டாடும் அவசியம் என்ன?
கேள்விகள் மனதில் எழுகின்றன..

கேள்வி கேட்பதில்  காப்புரிமை பெற்றது  BSNLEU...
ஆயினும் காப்புரிமையைத்  தாண்டி 
ஊழியர்கள்  மனதில் சில கேள்விகள்  எழுகின்றன...

போனஸ் விவகாரத்தில்..
இன்றைய ஏப்ரல் FOOL ஆர்ப்பாட்டத்தை...
விழாக்காலத்தில்  அன்றே  ஏன் நடத்தவில்லை?

30/03/2016 அன்று நடைபெற்ற போனஸ் குழுக்கூட்டத்தில்...
கலந்து கொள்ளாத உண்மையான காரணம்  என்ன?

இதுவரை...போனஸ் விவகாரத்தில்...
நடந்தது என்ன? நடப்பது என்ன?
ஊழியருக்கு எதையும்  சொல்லாமல் ஏமாற்றும் மர்மம்  என்ன?

BSNL ஊழியர்களுக்கு...
நிர்வாகம் முன் வைத்த போனஸ் தொகை..எவ்வளவு?
சிறியதா? பெரியதா? சின்னஞ்சிறியதா?

போனஸ் விவகாரத்தில்..BSNLEU  சங்கத்திற்கு..
கணக்கீட்டு முறையில் கருத்து வேற்றுமையா?
அல்லது முன் வைக்கப்படும்  தொகையில் பிரச்சினையா?

கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொண்டால்..
நிர்வாகம் முன்மொழியும் அற்பத்தொகையை..
அற்புதத்தொகையாக  மாற்ற BSNLEUவிடம் என்ன திட்டம் உள்ளது?

இன்றைய ஏப்ரல் FOOL...
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் BSNLEU  நிலை என்ன?

ஆட்டம்... பாட்டம்... ஆர்ப்பாட்டம்...தேர்தல் வரைதானா?
தேர்தல் முடியும் வரை...
போனஸ் குழுவில் பங்கேற்காமல்
போக்கு காட்டும் புரட்சிகர முடிவு தொடருமா?

அல்லது வழக்கம் போல்...
NFTE  கணக்கில் எல்லாவற்றையும் எழுதும் திறமை மிளிருமா?

உலகத்தலைவர்களின் கொட்டேசன்களை
உருப்போட்டு மேடையில் பேசும் உங்களிடம்
ஊழியர்  பிரச்சினைகளைத் தீர்க்க 
உருப்படியான கொட்டேசன்கள் இல்லாமல் போன காரணம் என்ன?

2007 சம்பள மாற்றம்...நாலு கட்டப்பதவி உயர்வு என
எதிலும் சொந்தமாக கொட்டேசன்  இல்லாமல் போனது ஏன்?

NFTEஐ   LOW  QUOTATION என்று சொல்லும் BSNLEU 
போனஸ் விவகாரத்தில்  NO  QUOTATION...ஆன  பரிதாபம் என்ன?

கொடுப்பது சங்கமா?  கெடுப்பது  சங்கமா?
கெடுக்கும் குணம் மறையுமா? கேடு நிலை தொடருமா?

போராட்டத்தால் உரிமைகளைப் பெற முடியுமா?
நாடகத்தால்  உரிமைகளைப் பெற முடியுமா?

இறுதியாக ஒரு கேள்வி...
இன்றைய ஏப்ரல் FOOL...ஆர்ப்பாட்டம்
நிர்வாகத்தை எதிர்த்தா? NFTEஐ எதிர்த்தா?

3 comments:

  1. சாட்டையடி கேள்விகள் தோழரே

    ReplyDelete
  2. சாட்டையடி கேள்விகள் தோழரே

    ReplyDelete
  3. இதுக்கெல்லாம் பதில் போடுவாங்களா தோழர்? இருந்தா நிச்சயம் போட்டுருவாங்க! வச்சிக்கிட்டு என்னா வஞ்சனையா பண்ணப் போறாங்க!

    ReplyDelete