Saturday 9 April 2016

முழு ஓய்வூதியம் 

ஏசு  பிரான் 33 ஆண்டுகள் பூவுலகில் உயிர் வாழ்ந்தார். 
அதனால்தான் 33 ஆண்டுகளை முழு சேவைக்காலமாக வெள்ளையர்கள் விதித்திருந்தனர். எனவே மத்திய அரசு ஊழியர்கள் 33 ஆண்டுகள் பணி புரிந்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு  வந்தது. 

33 ஆண்டுகளைக் குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை 6வது ஊதியக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 
20 ஆண்டுகள் சேவைக்காலமாக குறைக்கப்பட்டது. ஆனால் 2006க்கு முன்பாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 2006 ஊதியக்குழுவின் பரிந்துரைகள்  அமுல்படுத்தப்படும் போது அடிப்படைச்சம்பளத்தில்  
50 சதம் ஓய்வூதியம் என்ற கோரிக்கை மட்டுமே அமுலுக்கு  வந்தது.  

33 ஆண்டுகளுக்கு  கீழே சேவை முடித்தோருக்கு ஓய்வூதியம் 
அவர்களின் சேவைக்காலத்திற்கு ஏற்ப  விகிதாச்சார அடிப்படையில் 
PROPORTIONATE PENSION வழங்கப்பட்டு வந்தது.  
எனவே  33 ஆண்டுகளுக்கு  கீழே சேவை செய்து 
விகிதாச்சார ஓய்வூதியத்தால் பாதிக்கப்பட்ட 
தோழர்கள் பலர் நீதி மன்றம் சென்றனர். 

ஓய்வூதியர்கள் சங்கங்கள்  தொடர்ந்து இப்பிரச்சினையை வலியுறுத்தின. ஓய்வூதியர்கள் சங்கங்கள்  சார்பாக பல்வேறு  நீதி மன்றங்களில்  வழக்கு தொடுக்கப்பட்டன. இரயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை எழுப்பியது.
தற்போது  மிக நீண்ட போராட்டத்திற்குப்பின் ஓய்வூதிய இலாக்கா  இப்பிரச்சினையைத்  தீர்த்து வைத்துள்ளது. 
2006க்கு முன்பு (PRE 2006)  ஓய்வு பெற்ற தோழர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயம் செய்யும்போது 33 ஆண்டுகள் சேவையைக்கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என 06/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 

இதனால் 2006க்கு முன்பு ஓய்வு பெற்ற 
33 வருடங்களுக்கு குறைவான சேவை முடித்த 
நமது மூத்த தோழர்கள் பலன் பெறுவர். 

ஓய்வூதிய நிலுவை 01/01/2006 முதல் வழங்கப்படும்.

முழு ஓய்வூதியத்திற்கு 33 வருட சேவைகள் என்பது 20 வருடமாக குறைக்கப்பட்டாலும் முழு பணிக்கொடை GRATUITY  பெற  
33 ஆண்டுகள் சேவை என்பது இன்னும்  மாற்றப்படவில்லை.
முழு பணிக்கொடைக்கான சேவைக்காலமும் 
20 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment