Friday 10 July 2015

செய்திகள்
==========

நமது BSNL நிறுவனத்தின்  மனித வள இயக்குநராக
DIRECTOR (HR)
இதுவரை நிதி இயக்குநராகப் பணி புரிந்த 
சுஜாதா ராய் 
அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப்பதவியில் இது நாள் வரை  நிரந்தர இயக்குநர் இல்லாத காரணத்தால் ஊழியர் பிரச்சினைகள் தீர்வின்றித்  தேங்கிக்கிடந்தன. இனியாவது ஊழியர் பிரச்சினைகளுக்கு விடிவு  பிறக்குமா 
என பொறுத்திருந்து பார்ப்போம்.
===============================================
ஜூலை 2015 முதல் 2.1 சத IDA  உயர்விற்கான 
DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. 
BSNL உத்திரவு விரைவில் வெளியிடப்படும்.
===============================================
BSNL - MTNL இணைப்பு இன்னும் நான்கைந்து மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என  DOT  செயலர் திரு.ராகேஷ் கார்க் கூறியுள்ளார்.
===============================================
BSNLலில் இருந்து ஓய்வு பெறும் தோழர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு அவர்களது  ஓய்வூதியப்பலன்கள் காலத்தே கிடைத்திட வகை செய்ய வேண்டும் 
என BSNL நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 
===============================================
ஜபல்பூரில் தனி மாநிலத்தகுதியில் இயங்கி வந்த
 QA CIRCLE மற்றும் INSPECTION CIRCLE ஆகியவை 
ஒரே அமைப்பாக QA & INSPECTION  
என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளன. 
===============================================
இலவச இரவு நேர அழைப்பு மற்றும் இலவச ROAMING 
வசதி பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு 
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்களை 
மாநில மாவட்ட மட்டத்தில் நடத்திட BSNL நிர்வாகம் 
மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
===============================================
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2  சத IDA  இணைப்பு
 இன்னும் உறக்க நிலையிலேயே உள்ளது. 
மத்திய மந்திரிசபைக்குறிப்புக்கு செல்லும் முன் கருத்து  சொல்ல  வேண்டிய நிதி, ஓய்வூதியம், சட்டம் மற்றும் கனரக தொழிற்சாலை இலாக்காக்கள் நாட்டை முன்னேற்றும் பணியில் மும்முரமாக இருப்பதால் பாவப்பட்ட ஓய்வூதியர்களின் பிரச்சினையைப் பற்றி சிந்திக்க நேரமில்லை என்று கூறப்படுகிறது. 
நமது மூத்த தோழர்கள் இனியும் பொறுமை காப்பது உசிதமல்ல.
===============================================

No comments:

Post a Comment