Tuesday 9 June 2015

காப்பீட்டுத்திட்டங்கள் 

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்க்கை உத்திரவாதமற்ற வாழ்க்கை. நாள்தோறும் அவர்களிடம் வேலை வாங்கும் நிர்வாகம் அவர்களுக்கு விபத்து, மரணம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும்  நேரங்களில் அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள்  ஏதும் செய்வதில்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. ஒப்பந்த ஊழியர்கள் EPF திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே மரணத்தின்போது 60000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது. நமது துறையில் EPF பிடித்தம் செய்யப்பட்டாலும் முறையாக செலுத்தப்படுவதில்லை. இதற்காகவே நாம் போராட வேண்டியுள்ளது. 

இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் இந்திய அரசின்
 மக்கள் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய
 வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இருவகையான திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்திட்டம். 

  • வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • வயது 17 முதல் 70 வரை.
  • ஆண்டு காப்பீட்டு உரிமத்தொகை PREMIUM  ரூ.12 மட்டும் 
  • காப்பீட்டுக்காலம் 365 நாட்கள் 
  • விபத்து நேர்ந்தால் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை இழப்பீடு 
  • விபத்தால் மரணம் நேர்ந்தால் 2 லட்சம் இழப்பீடு.

பிரதமரின் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத்திட்டம். 

  • வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • வயது 18 முதல் 50 வரை.
  • ஆண்டு காப்பீட்டு உரிமத்தொகை PREMIUM ரூ.330/= 
  • காப்பீட்டுக்காலம் 365 நாட்கள் 
  • விபத்து மற்றும் மரண இழப்பீட்டுத்தொகை  2 லட்சம்.
  • இயற்கை மரணத்திற்கும் இழப்பீடு உண்டு.

வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் மேற்கண்ட இரண்டு காப்பீட்டுத்திட்டங்களிலும் உறுப்பினராக சேர இயலும். ஆனால் ஒரேயொரு வங்கியில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். 

காரைக்குடியில் UNION BANK OF INDIA 
வங்கியின் மேலாளர் 
உரிய படிவங்களை நம்மிடம் அளித்துள்ளார்.
 தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். 
PREMIUM உரியவர்களின் வங்கிக்கணக்கில் 
இருந்தே பிடித்தம் செய்யப்படும்.

No comments:

Post a Comment