Thursday 19 February 2015

வாங்க.. வாங்க..வங்கிக்கடன் 

இக்கட்டில் இருப்போர் கடன்களுக்காக  வங்கிகளின்
படிக்கட்டில்  காத்திருந்த காலம் உண்டு. 
இப்போது வங்கிகள்.. 
கடன் வேண்டுமா? என்று கேட்டு 
நம் வீட்டுப் படிக்கட்டின் முன்  நிற்கின்றன.

காரைக்குடி கனரா வங்கி 
காரைக்குடி  பொது மேலாளர் அலுவலகத்தில் 
கடன் திருவிழாவை நடத்தியது. 
" நாங்கள் ஏற்கனவே உங்கள் வங்கியில் கடன் வாங்கியுள்ளோம். 
பழைய கடனைக் கழித்துக்கொண்டு புதிய கடன் தர முடியுமா? 
என்பதே அனைத்து தோழர்களும் மறக்காமல் கேட்ட கேள்வி..

கனரா வங்கியும் சற்றும் தாமதிக்காமல் சம்மதம் சொல்லி விட்டது. 
தற்போது கனரா வங்கியில் அதிகபட்சமாக 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே ஏற்கனவே நமது தோழர்கள் வாங்கிய கடனைக் கழித்துக்கொண்டு  புதிய கடனை  
கனரா வங்கி வழங்க ஆரம்பித்து விட்டது. 
நமது தோழர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

கடன் வாங்குவோருக்கு ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கனரா வங்கியிடம் வைத்துள்ளோம். 
தங்களது மேல்மட்ட நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கனரா வங்கி கூறியுள்ளது. 

கடன் மேல் கடன்  வாங்கி.. 
காலம் சென்ற தோழர்.சுப்பையா TSO அவர்களின்
கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தோம்.
கனரா வங்கி ஒத்துக்கொண்டது பாராட்டுக்குரியது. 

1 comment:

  1. வட்டியை தள்ளுபடி செய்ய முயற்சித்த மாவட்ட சங்கத்திற்கும், அதை ஏற்றுகொண்ட கனரா வங்கி தலைமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் எங்கள் கிளையின் சார்பாக, உறுப்பினர் இறந்த பொழுதும் அவருக்காக அவரின் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முயற்சி எடுத்தது சால சிறந்தது. நன்றி தேவகொட்டை

    ReplyDelete