Friday 28 November 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம் 
துளிகளும்...வலிகளும்...


நவம்பர் - 27

  • வழக்கமாக  தேனீ ர் நேரத்தில்  வெறிச்சோடிக்கிடக்கும் நமது வாடிக்கையாளர்  சேவை மையங்கள்  அன்று நாள் முழுவதும் வெறிச்சோடிக்கிடந்தன. 
  • கலகலப்பாகவும், கைகலப்பாகவும் இருக்கும் டீக்கடை பெஞ்சு அன்று கலகலத்து இருந்தது. 
  • பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஏட்டு மதிய சாப்பாட்டுக்கு ஏதும் வழி பிறக்குமா என்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
  • கால் வலிக்க நின்று கொண்டிருந்த காவலர் வாய் வலிக்க.. வாடிக்கையாளர்களிடம் வேலை நிறுத்தம்.. வேலை நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். பகல் நேரப்  பணிக்கு வந்த தவறை எண்ணி தலையைச் சொறிந்து கொண்டார்.

  • வேலை நிறுத்தம் அன்று தோழர்கள் சிலர்   மர்ம நோயாலும், மறைமுக நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். 
  • போராட்டக்காய்ச்சல் அதிகமாகி ஒரு சிலர் பிதற்றிக்கொண்டிருந்ததையும் நாம்  காண நேரிட்டது.    
  • வைத்தியர்களுக்கு வைத்தியம் செய்யாமலே நல்ல வரவு என்றும்  கேள்வி. 
  • போராட்டக்காய்ச்சலில்    பாதிக்கப்பட்டவர்கள் ஒரே இரவில் உடல் தேறி உடன் மறுநாள் பணிக்குவந்த காட்சி நம்மை நெகிழ வைத்தது.
  • வழக்கமாக  11 மணிக்கும் 12 மணிக்கும் பணிக்கு வரும் சில தோழர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அதிவிரைவாக அலுவலகம் வந்திருந்த அதிசயமும் நிகழ்ந்தது. இத்தகைய அதிசயங்கள் நித்தமும் தொடர வேண்டும் என்ற நமது வேண்டுதலும் தொடர்ந்தது.
  • பத்து மணிக்கு அம்மா கடையில் ATTENDANCE "போட்டு" விட்டு அலுவலகத்திற்கு 11 மணிக்கு வரும் BSNL பெருங்குடிகள் சிலர்  கை கால் நடுக்கத்தையும் பொருட்படுத்தாமல்  பத்து மணிக்கே அலுவலகம் வந்தது நம்மை நடு நடுங்க வைத்து விட்டது. நல்ல வேளை.. மறுநாள் வழக்கம் போல் பத்து மணிக்கு அம்மா கடைக்கு சென்று  நடுக்கம் நீக்கி  11 மணிக்கு மேல்  அவர்கள் அலுவலகம்  வந்ததைக் கண்ட  பின்புதான் நமக்கு நடுக்கம் நின்றது. 
  • DIES NON புகழ்  தோழர்கள் சிலர் அன்று அதிரடியாக அலுவலகம் ஆஜரானது கண்டு நமக்குப்  புல்லரித்து விட்டது. நமது புல்லரிப்பு நீண்ட நாள் FULL அரிப்பாக மாறிட  நாம்  வேண்டிக்கொண்டோம்.
  • நிரந்தர ஊழியர்களின் நிர்ப்பந்தமோ என்னவோ..ஒப்பந்த ஊழியர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சில பகுதிகளில் இன்னும் அக்டோபர் மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த கோபம் கூட காரணமாக இருக்கலாம்.
  • ஓய்வுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதைக் காரணம் காட்டி ஒரு சிலர் தங்கள் இறுதிக்காலப்பணியை இடைவிடாமல் மேற்கொண்டு இருந்தனர்.
  • வேலை நிறுத்தம்  என்பது கூட மறந்து ஒரு சிலர் ERP இறைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
  • கைச்சங்கம் அகில இந்திய அளவில் நம்மோடு கைகோர்த்தும் கூட தமிழகத்தில் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டிருந்தது. அலுவலகம் வரச்சொல்லி  அனைவரையும் குறுந்தகவல் மூலம் கூவிக்கூவி அழைத்து சங்கப்பணியாற்றியது.

இத்தனையும் தாண்டி வழக்கம் போல்.

  • வர்க்க உணர்வு கொண்ட தோழர்கள்...
  • கடமை உணர்வுடன் பணியாற்றும் தோழர்கள்...
  • சங்கத்தின் கட்டளையை சிரமேற்கொண்ட தோழர்கள்..
  • அநியாயத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கும் தோழர்கள்...
போராட்ட முனையிலே
முகத்து நின்றார்கள்... 
முகம் சிவத்து நின்றார்கள்..

இவர்களே..
இந்த இயக்கத்தின் இதயங்கள்...
பாரம் சுமக்கும் தோள்கள்...
பெருவயிறு தாங்கும் பாதங்கள்...
பிறர் வலி கண்டு நனையும் விழிகள்...
கண்ணீ ர் துடைக்கும் கரங்கள்...

அவர்களுக்கு
நமது வாழ்த்துக்களும்...
 வணக்கங்களும்... 

3 comments:

  1. Very Nice - regarding Nov 27 Strike Review -
    S Ravi GM [O] BSNL Cuddalore-1

    ReplyDelete
  2. மாரிக்கு மட்டுமே செந்தமான நடையிது ,
    வாழ்த்துக்கள் ,,,,,,

    ReplyDelete
  3. மாரி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete