Friday 5 September 2014

நடையாய்.. நடந்து...

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு
 போக்குவரத்துப்படியை குறைந்த பட்சம் ரூ.1000/= என்று உயர்த்தி 11/07/2014 அன்று BSNL நிர்வாகம் உத்திரவிட்டது. 

காரைக்குடி மாவட்டத்தில் இந்த உத்திரவை அமுல்படுத்தக்கோரி  
நடக்க முடியாத நமது தோழர்கள் கணக்கு அதிகாரியிடம் 
நடையாய் நடந்து இப்போதுதான் பெற்றுள்ளனர். 

இதில் JTO  போன்ற பதவிகளில் உள்ள தோழர்களுக்கு எந்த பலனும் இல்லை. காரணம் ஏற்கனவே அவர்கள் ரூ.1000/= பெற்று வருகின்றனர். 
NE-11 சம்பள விகிதத்தில் உள்ள தோழர்கள் மாதம் ரூ.950/= போக்குவரத்துப்படியாக பெற்று வந்தனர். 
அவர்களுக்கு ரூ.50/= மட்டுமே உயர்ந்துள்ளது.  

NE-11 சம்பள விகிதத்திற்கு கீழே உள்ள ஊழியர்கள் ரூ.400/= பெற்று வந்தனர். அவர்களுக்கு மட்டுமே 
ரூ.1000/=  உயர்வு என்பது பலனுள்ளதாக உள்ளது. 

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு சலுகைகளை அளிப்பதில் மிகுந்த மனிதாபிமானத்துடன் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும். 
கொடுக்கும் சலுகையிலும் குறைவானவர்களுக்கே 
பலன் கிட்டுவது போல் கொடுப்பதும்... 

சாமி வரம் கொடுத்த பின்பும் 
பூசாரிகள் இழுத்தடிப்பதும்.. 

யார் ஊனமுற்றவர்கள்?
 என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றது...

1 comment:

  1. ஊழல் கார் பில் பைல் தாமதபடாது... வடிகட்டிய சிவில் பொய் பில் தேங்கி நிற்காது ... இதை " செம்புலத்து நீர் போல்" என்றான் போல் ... போகிற இடத்தில கரைந்து விடுவது ... இது நம் சாபகேடு ....

    ReplyDelete