Monday 23 June 2014

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

தோழர்களே...
                         போன்மெக்கானிக் தேர்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் தமிழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தேர்வு அறிவிப்பால் எத்தனை தோழர்கள் பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம் RM/GRD பதவிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. 

                        உதாரணமாக காரைக்குடி மாவட்டத்தில்  80 காலியிடங்கள்.             12 தோழர்கள் RM/GRDயாகப் பணி புரிகின்றார்கள்.  ஆனால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்  ஒருவர்  கூட இல்லை                 என்பது வேதனையான செய்தியாகும். கல்வித்தகுதியைத்தளர்த்தாமல் எத்தனை தேர்வு அறிவிப்பு வந்தாலும் ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை.

3 comments:

  1. சேலம் எழுத தோழர்கள் உள்ளனர் ஆனால் பணியிடம் இல்லை... ....இருக்கு ஆனா இல்லை ..இந்த வசனம் எதற்கு சரியாக பொருத்தமாக இருக்தோ இல்லையோ ஆனால் BSNL. வருகின்ற TM தேர்வுக்கு 100% சரியா இருக்கு.

    ReplyDelete
  2. யாருமே இல்லத கடையில யாருக்கு தான் டீ ஆத்தராங்கனு புரியல...

    ReplyDelete
  3. வரும் ஆனா வராது,.இருக்கு ஆனா இல்லை

    ReplyDelete