Wednesday 8 January 2014

ஒப்பற்ற 
லிக்திர் பொன்விழா 

வாள்  முனையினும் வலியது பேனா முனை
ஐம்பது ஆண்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் 
கூர்முனையாய் செயலாற்றிய 
ஒலிக்கதிரின் பொன்விழா 
களம் பல கண்ட கடலூரில் 
வந்தோர் திகைக்க வராதோர்  தகிக்க 
வந்தும் வராதோர் மனம் புகைக்க 
வரலாற்றுக் கல்வெட்டாய்  
வலிமையான முத்திரை பதித்துள்ளது..

FLEXIBLE செயல்பாடு .. 
FLEX FULL ஏற்பாடு.. 
என கடலூர் மாவட்டம் கலக்கிட..

நமது சிந்தை நிறைந்த தந்தை 
தோழர்.குப்தாவிற்கு முதலாண்டு 
நினைவுப்புகழ் அஞ்சலி செலுத்திட..

சகோதர சங்கத்தலைவர்களும் 
சகல சங்கத்தலைவர்களும் 
முதன்மைப் பொதுமேலாளரும் 
இணைந்த கரங்களாய் வாழ்த்துரை வழங்கிட 

அகில இந்தியத்தலைவரும் 
அகில இந்தியபொதுச்செயலரும் 
பறந்து வந்து சிறப்புரை செய்திட..

தலைவர்களின் தலைவிகளுக்கு 
தக்க மரியாதை அளித்திட..

தஞ்சையும்.. குடந்தையும்..சேலமும்..
நாற்காலி என்னும் உடனடி உண்மை நாடகத்தில் 
அனைவரையும் கொள்ளை கொள்ள 

கவியரங்கத்தில் கவிஞர்கள் 
ஒலிக்கதிரின் மேன்மை சொல்ல..

கருத்தரங்கத்தில் 
ஒலிக்கதிரின் 50 ஆண்டு பணியை 
5 மணித்துளிகளில் தோழர்கள் 
கடுகைத்துளைத்து குறுகத்தரிக்க 

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் 
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் 
தோழர். தா.பாண்டியன் அவர்கள் நிறைவுரையாற்ற 

இடை இல்லா நிகழ்ச்சிகளோடு..
நீங்கா நினைவுகளோடு.. 
நெஞ்சம் நிறைத்தது.. 
ஒலிக்கதிர் பொன்விழா மாநாடு.. 

ஒலிக்கதிரின் வீச்சும்.. 
பொன்விழா பற்றிய பேச்சும்.. 
நீண்ட நாள் ஓங்கி ஒலித்திடும்..

No comments:

Post a Comment