Monday 2 December 2013

SSA இணைப்பு 

சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநில  முதன்மைப் பொதுமேலாளர்கள் CGM கூட்டத்தில் தொலைபேசி இணைப்புக்குறைவால் வருவாய் குறைந்து வரும் தொலைத்தொடர்பு மாவட்டங்களை அருகே உள்ள மாவட்டங்களுடன் இணைப்பது பற்றி கருத்து முன் வைக்கப்பட்டது. 
அதே கருத்து நவம்பர் 30 அன்று நிர்வாகம் நடத்திய  அனைத்து சங்க கூட்டத்திலும் முன் வைக்கப்பட்டது. இதே கருத்து பல நாட்களாகவே அதிகாரிகள் மத்தியில் உலவ விடப்பட்டுள்ளது. 
உதாரணமாக காரைக்குடி மாவட்டம் திருச்சியுடனும், விருதுநகர் மாவட்டம் மதுரையுடனும் இணைக்கப்படலாம் என பேசப்பட்டது. 

இந்நிலையில் நமது மத்திய சங்கம் SSA இணைப்பு என்பது மாற்றல் மற்றும் தேவையற்ற ஊழியர் பிரச்சினையை உருவாக்கும் எனவே 
SSA இணைப்பு என்பதை கடுமையாக எதிர்க்கின்றோம் என 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. 
SSAக்களின் இணைப்பு மற்றும் வருவாய் குறையும் பட்சத்தில் 
SSA நிர்வாக அதிகாரியை GMல் இருந்து TDM ஆகவோ DE ஆகவோ தரமிறக்கலாமே தவிர அடுத்த மாவட்டத்துடன் இணைப்பது என்பது ஏற்றுகொள்ளத் தக்கதல்ல என்று தக்க தருணத்தில்
 நமது சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment