Saturday 24 August 2013

78.2 சத இணைப்புக்கோரி 
மூத்த குடிமக்களின் போராட்டம் 

வயது 60 ஆகிவிட்டது. அக்கடா என்று அமைதியாக இருக்கலாம் என்றாலும் இந்த அரசும் நிர்வாகமும் இந்த தேசத்தில் யாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  
01/01/2007ல் இருந்து 09/06/2013 வரை 77.3 மாதங்கள் BSNLலில்  பணி புரிந்து ஓய்வில் சென்ற மூத்த ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பை தர இயலாது 
என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது.
இந்த கைவிரிப்பைக்கண்டு கைகட்டி இருக்க முடியாது என ஓய்வு பெற்றோர் கை உயர்த்தி போராட்டக்களம் காண இறங்கிவிட்டனர்.

AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
23/09/2013 அன்று அனைத்து மாவட்டம் மற்றும் 
மாநில அளவில் ஆர்ப்பாட்டம்.
23/10/2013 அன்று தலைநகர் டெல்லியில் தர்ணா 
ஆகிய போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இன்றைய சூழலில் உழைக்கின்ற ஊழியர்கள் பல்வேறு சங்கங்களாகவும், அமைப்புகளாகவும் இருந்தாலும் பொதுப்பிரச்சினைகளில் ஒன்று பட்டு போராடி வருகின்றனர். ஆனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வுக்குப்பின்னும் TEPU, BSNLEU, FNTO மற்றும்  பல சங்கங்கள் சார்ந்த துக்கடா அமைப்புகளாக சிதறிக்கிடக்கின்றனர் . NFTE மட்டுமே ஓய்வு பெற்றோரின் அமைப்பை  உருவாக்கவில்லை. தோழர். இராமன்குட்டியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட AIBSNLPWA அமைப்பில் இணைந்து முன்னாள் NFTE  தோழர்கள் செயலாற்றி வருகின்றனர். 
78.2 சத இணைப்பை 01/01/2007ல் இருந்து பெறுவது என்பது மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். இந்நிலையில் பல்வேறு அமைப்புகளாக சிதறுண்டு இருந்தால் தங்கள் கோரிக்கையை அடைய முடியுமா என்னும் கவலை நமக்கு உண்டாகின்றது. உழைக்கின்ற ஊழியர்களைப் போலவே ஓய்வு பெற்ற தோழர்களும் தங்களுக்குள் ஒரு இணைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது.
ஒரு சிங்கம் நான்கு  மாடுகள் கதையை கற்றுக்கொடுத்த மூத்தோர்கள் தங்கள் இயக்க வாழ்விலும் அதைக்கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment