Wednesday 26 June 2013

மதி மயக்கம் 

தோழர்களே..
மதுரை மாநில மாநாட்டிற்குப்பின் 
ஆறாவது தேர்தலுக்குப்பின்
எட்டாண்டுகழித்து  அங்கீகாரம் அடைந்தபின்
எல்லோரும் இணைந்து 78.2ஐ பெற்ற பின்..

ஏற்றமுடன்.. கொடியேற்றமுடன்..
வேலூரில் நமது மாநில செயற்குழு கூடியது..

நடுக்கடல் படகாய்  BSNL நிறுவனம்..
கரையில் காத்திருக்கும் பெண்களாய் ஊழியர்கள்..
ஏராள ஊழியர் பிரச்சினைகள்...
தாராளமாய் செயற்குழு விவாதிக்கும்.. 
தமிழகம்.. கலங்கரை விளக்காய் ஒளி தரும் என்று 
நம்பிக்கையாய் நமது தோழர்கள் கலந்து கொண்டனர்..

காலம் முழுவதும் தோளில் ஜோல்னாப்பையுடன்
கடைநிலைத்  தொண்டனாய் சங்கப்பணி செய்த தோழர்.சேது 

இன்சொலன் ஆனேன் நான்..
இன்சுலினால் வாழ்வேன் நான்.. 
இதயம் இயங்கு மட்டும்..
இயக்கத்தை மறவேன் நான்..
என்று வாழும் தோழர்.ஜெயபால் 

ஆகிய தோழர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தது 
தவறு என்று தவறாக வாதிட ஆரம்பித்தது 
தவறாக வழி நடத்தப்படும் ஒரு கூட்டம்.

ஆர்ப்பரித்தார்கள் .. தலைமையை அவமதித்தார்கள்..
அடிமட்ட ஊழியரின் உணர்வை மறுத்தவர்கள் 
தங்கள் உணவையும் மறுத்தார்கள்..
இறுதியில் அவையின் வெம்மை கண்டு 
வெளிநடப்பு செய்தார்கள்..

ஒரு குடம் பாலில் 
ஒரு துளி விஷம் என்பார்கள் 
இங்கோ 9 துளிகள் ..

இத்தனை இன்னல்களுக்குப்பின்பும் 
என் கடன் பணி செய்வதே என 
செயற்குழு தன் விவாதம் தொடங்கியது..
அமைப்புநிலையை அலசியது..
ஊழியர் பிரச்சினைகளை முன்வைத்தது..
வருங்காலக்கடமைகளை வகுத்தெடுத்தது..
நிறைவுடன் தன் பணி முடித்தது..

தோழர்களே..
NFTE  மாபெரும் இயக்கம்..
சீர்குலைவுகள்,நம்பிக்கை துரோகங்கள்,
எதிர்ப்புக்கள்,ஏளனங்கள் என 
எல்லாவற்றையும் தாங்கி, தாண்டி நடைபோடும் இயக்கம்..

மதிமயக்கத்தால் 
இதன் மாண்பை சீர்குலைக்கும் தோழர்கள் 
இதனின்றும் விடுபட வேண்டும்..
இயக்கத்தை மிஞ்சியவர் என எவரும் இருக்க முடியாது..
இயக்கத்தைக் காத்திடுவோம்.. அதன் 
இயக்கத்திற்கு இடையூறு இல்லா வண்ணம் செயல்படுவோம்..


வாழ்க... NFTE... 

1 comment:

  1. தோழர் மாரி அவர்களுக்கு மட்டுமே சொந்தமான நடை இது.பாரம்பரியம் ,பண்பாடு ,நாகரிகம் ,தியாகம் ....எதையும் மதிக்காத ,,மதி மயக்கத்தில் ,மதி போகும் (மனம் போகும் பாதையில் )பாதையில் போகிறவர்கள் சிந்திக்கட்டும் ,,,இவர்களின் ஜனநாயக விரோத /தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் ,,,தக்கபாடம் புகட்டுவார்கள் ,,நன்றி
    கே.நடராஜன் .TTA /PSM
    ACS /NFTE -BSNL
    தஞ்சாவூர்

    ReplyDelete