Saturday 13 April 2013


வடக்கு வசப்படுமா?

தேர்தல் களம் உச்சக்கட்ட சூடு அடைந்துள்ளது.
நமது தோழர்கள் கேட்கும் ஒரே  கேள்வி 
NORTH நல்லாயிருக்கா?
வடக்கு வசப்படுமா?
என்பதே..

சரிதான்

அதையும் கேட்டு விடுவோம் என நினைத்து 
இராஜஸ்தானிலுள்ள நமது தோழரிடம் கேட்டோம்..

அவர் சொன்னார்.. 
தோழர்.. 
NORTH  நல்லாயிருக்கு...
SOUTH  சரியா இருக்கா?

இம்முறை BSNLEU எதிர்ப்பு மனநிலை இங்கு நிலவுகின்றது 
BSNLEU  எங்களுக்கு  சலித்து விட்டது..
நாங்கள் சிந்திக்கும் நிலை அடைந்துவிட்டோம் ..
எனவே 
BSNLEUவை சந்திக்கு அனுப்பாமல் விட மாட்டோம்...

ஆனால் 
அதிகமான வாக்குகளை 
ஆந்திரம், கேரளம்,தமிழ்நாடு,கர்நாடகாவிலும்
மத்தியிலுள்ள மகராஷ்டிராவிலும்  வைத்துள்ளீர்கள்..
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
என எதிர்க்கேள்வி  கேட்டார்..

அவரது கேள்வியின் உண்மை புரிந்தது 
வடக்கு வசப்படுமா? 
என வருத்தம் கொள்வதை விட 
நாம் இருக்குமிடத்தை வசப்படுத்தியுள்ளோமா? என்பதே முக்கியம்..

BSNLEUவிடம் இருந்து
BSNLஐ மீட்க வேண்டும்.. என்றால் 
பூச்சாண்டி பின் செல்லும் குழந்தைகள் போல் 
BSNLEU  பின் மதி மயங்கிச் சென்று கொண்டிருக்கும்
ஊழியர்களை மீட்க வேண்டும்...

தோழர்களே..

அந்தப்பணியை செவ்வனே செய்வோம்..

NORT - SOUTH - EAST -WEST  என 
திசைகளைப் பற்றி கவலைப்படாமல் 
நாமிருக்கும் இடத்தில்..
திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் 
தோழர்களை வசப்படுத்தினால்..

NORTH மட்டுமல்ல.. 
நாடே வசப்படும்..






1 comment:

  1. //BSNLEUவிடம் இருந்து
    BSNLஐ மீட்க வேண்டும்.. என்றால்
    பூச்சாண்டி பின் செல்லும் குழந்தைகள் போல்
    BSNLEU பின் மதி மயங்கிச் சென்று கொண்டிருக்கும்
    ஊழியர்களை மீட்க வேண்டும்..//

    ஜமாய்க்கிறீர்கள்!

    இந்தமுறை வந்தேயாகவேண்டும் என அனைவரும் உழைக்கிறோம்.

    நமது கவலை-உழைப்பு எல்லாம், நாம் வரவேண்டும் என்பதல்ல!

    நாம் வந்தால்தான் நிறுவனத்தைக் காக்க முடியும்,
    ஊழியர் நலனைக் காத்திட முடியும்
    என்ற அக்கறையினால்!

    ReplyDelete