Saturday 30 March 2013


நன்றி...  தோழர்களே... 


கடைசியில் நாங்களும் "வலையில்" விழுந்து விட்டோம்.
"பின்னப்பட்ட வலையில் பிழை இருக்கின்றதா" ? என 
கும்பகோணம் இளையவர் விஜயிடம் 
சும்மா ஒரு குத்து மதிப்பு கேட்டிருந்தோம் . 
அவரோ மதிப்பான முத்திரையைக் குத்தி 
ஆகாய வலையில் எங்களை மிதக்க விட்டார். 
அவரே எங்களின்  வெளியீட்டாளர். 
அவருக்கு எங்களின் முதல் நன்றி.

விமர்சனம் என்ற வேப்பங்காய்க்கு "ஏகடியம்" என்பதே இனிப்புத்தடவல்.
இதைச்சரியாகவே  சொல்லி நல்ல தமிழ் எழுத
 எங்களை வாழ்த்தினார் மாநிலச்செயலர்.
ஆனால் ஏகடியத்தில் அவரை மிஞ்ச முடியாது. 
பலருக்கு அது புரிவதில்லை.
எங்களைப்  பொருத்தவரை ஏகடியம் இரண்டாம் பட்சமே.
நற்சொல் நன்னடை நற்கருத்து இவைகளுக்கே முதலிடம்.

வலையில் முதிய சிவசிதம்பரம், முருகேசன்,பலராமன்,பாலகுமார்   மற்றும் பல தோழர்கள் அடித்த உற்சாக விசிலுக்கு எங்களது நன்றிகள்.

ஆனால் மார்ச் 30 இரவு 10 மணிக்கு சிவசிதம்பரம் கேட்டார்.  
என்ன  தோழர்!
முதல் செய்தியிலேயே முழங்கால் இட்டுக் கிடக்கின்றீர்களே? 
அடுத்த செய்தி எங்கே?  என்று.  
அப்போதுதான் புரிந்தது இந்த வலைப்பிசாசை 
தொட்டால் தொடரவேண்டும் என்பது.

என்ன செய்வது?
(வேலூர்)       மதி போல இருக்க நம்மால் முடியாது.
(தர்மபுரி)       மணி போலவும் இருக்க கூடாது. 

களப்பணி முதல்..  சகலப்பணிகளையும் 
நாமே  செய்ய வேண்டியுள்ளதால் 
வாய்ப்புக்கிடைக்கும்  போது மட்டுமே 
வலையில் சந்திப்பை நடத்த வேண்டியுள்ளது . 

கடைசியில் ஒருவருக்கு கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
கண்ணிலே  கசடு இருந்தும், 
கணிணியின் பால் காதல் கொண்ட,
தள்ளாத வயதிலும் 
புதிய தொழில்நுட்பங்களைத் தள்ளாத, 
ஏடுகளில் அடங்கிப்போன சங்கச் செய்திகளை 
இணையத்தில் வெளியிட்டு, உலகெங்கும் பரவ விட்டு, 
சங்க நடைமுறையில் புதிய அடி பதித்த, 
ஈரோட்டுத் தலைவர் தோழர்.மாலி அவ்ர்களுக்கு 
எங்களின்   மனங்கனிந்த நன்றி...

தொடர்ந்து சந்திப்போம்.

காரைக்குடி மாவட்டச்சங்கம்   







2 comments:

  1. மிக நன்று தொடரட்டும் அன்றாடம் இணைய தள பணி. மாலி

    ReplyDelete
  2. மாரி எழுத்து நடை ஊர் அறிய நல்லதோர் வாய்ப்பு பட்டாபி

    ReplyDelete